பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவலோக வாசிகள்

- - சர்வேஸ்வரா! இந்தப் பாவி செய்யும் அட்டூழியத் தைக் கண்டு, இவனை இப்படியே விட்டு வைக்கலாமா? கன்னியரைக் கற்பழிக்கும்காதகனைக் கல்லாய்ச்சபித்து, விடலாகாதா? - ரௌரவாதி நரகத்தில் தள்ள வேண், டாமா? காமப் பித்துப் பிடித்து அலைகிறானே! பெண் களை இம்சிக்கிறானே! பஞ்சமா பாதகத்திலே மிஞ்சிய தான காமத்திலே புரள்கிறானே! அவனுடைய கபடக் கண்கள் கதியற்ற கன்னியரைக்சூறையாடுகின்றனவே, ஆண்டவனே! அபலைகளைக் கெடுக்கும் இக்காமுகனின் சிரம் ஆயிரம் சுக்கல்களாக வெடிக்க வேண்டாமா? இப்படிப்பட்ட பாவியை என் இந்த பூமிக்குப் பாரமாக விட்டு வைத்திருக்கிறீர் அவனிடம் சிக்கிச் சீரழிந்தவர். களின் கண்ணீர் கல்லையும் கரைக்குமே, உமது மனம் உருகவில்லையா! ஆண்டவன் ஒருவன் இருக்கிறான் என்றுகூடக் கருதாமல் அக்ரமத்தை அடுக்கடுக்காகச் செய்கிறானே இந்தக் காமவெறிபிடித்த கயவன்! இவனை இனியும் நடமாட விடுவது முறையா பாபத்துக்கேற்ற தண்டனை தரவேண்டாமா? பரமேஸ்வரர் கண் திறந்து பார். இந்தக் காமுகனைத் தண்டித்து, எம்மைக் காப் பாற்று" என்று பக்திமான்கள், குறிப்பாகத் தாய்மார் *கள் பரம்பொருளைத் துதித்தனர். அவ்வளவு அக்ரமம் அவன் செய்து வந்தான். காமுகன் கயவன் கபடன்