பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாதுரை

31


களா! உண்மையிலே கூறு. ஏசுவின் உருவம் எத்தகைய கருணை பொழியுங் கண்களைக் காட்டக் காண்கிரோம் புத்தர் உருவின் முகப்பொலிவையும், சாந்தியையும் நோக்கு; பக்கத்திலே பெருச்சாளி வாகனனின் உரு வத்தை நிறுத்திப்பார்! கடவுள்களின் காட்சி எனும் கூத்திலே கணபதி, ஒரு விதூஷகராகவே பாவிக்கப்படு பார்" என்று வீரன் உரைத்தான்.

'களிமண்ணுங் கையுமாக இருப்பர் நமது மக்கள் என்று வீரன் சொன்னதிலே தவறு இல்லை. விநாயக சதுர்த்தியன்று, நம்மில் பலர், இத்தகைய வீணாட்டத் இலேதான் இருப்பர். வெளிநாட்டார் கேட்டால் நம்மைக் கேலி செய்வார்கள் என்பதும் உண்மையே. அதுமட்டுமா! விநாயகரின் வரலாற்று விசித்திராதிகள். களிமண்னுங் கையுமாக இருக்கும் தோழர்கள் சற்றுக் கவனித்தால், வீரன் கூறினதில் தவறில்லை என்று கூறிவிடுவர் என்பது திண்ணம்.

0 0 () 0

கரிமுகத்தோடு ஒரு கடவுள், நாக்கிலே நாயகியுடன் ஒரு கடவுள், நடனமாடும் மயில் மீது மற்றோர் கடவுள், அலைகடல்மீது ஆலிலை மேல் துயிலும் வேறோர் கடவுள், தாலமீது தையலுடன் பிறிதோர் தேவன், என்ற இன்னோரன்ன கடவுள்கள் இருந்து கொண்டு இன்னின் பன்ன வருக்கு இன்னின்ன விதமான நிலமை இருக்க வேண்டும் என்று ஏற்பாடுகளைச் செய்து கொண்டு வாழ் "கிறார்கள் என்பதை இன்றும் நம்பி, அந்த நம்பிக் கைக்கேற்ற நாள் நட்சத்திரம் நடவடிக்கைகளில் பாசம் வைத்துக்கொண்டுள்ள மக்களிடத்திலே, கான்ஸ்ட்டிடியூவண்ட் அசெம்பிளி, பற்றியும், காரல்