பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மெளன நாடகத்தை வழக்கமாகப் பார்வதி விரும்புவதில்லை ; இது அவள் பழக்கம் ; இயல்பு. அவளுக்கென்று ஒரு மனம் , தனி மனம் ! இரவுச் சாப்பாடு அப்படித்தான் ஆரம்பித்தது நடந்தது : முடிந்தது. ஒரே மெளளம். சிவகாமி லொக், லொக் கென்று இருமியபடி முன்னே நின்று, பின்னே அமர்ந்திருந்த ஆருயிர்க் கணவனுக்கும் அன்பு மகனுக்கும் உணவு படைத்தாள். பிறகு அவளும் உணவு கொண்டாள். ஆகவே, பார்வதி தானாகவும் தனியாகவும் சாப்பிட வேண்டியவள் ஆனாள் ; மாலையில் எதிர்பாராமல் ஏற்பட்டுத் தொலைத்த டென்ஷன்' அவளுடைய உள்ளத்தை மட்டுமல்லாமல், உடலையும் பாதித்திருந்த தால், அவளுக்கு உணவு வேண்டவில்லை. நிஜ வாழ்க்கை யில், நிஜமான மனிதர்களைச் சந்திப்பதே ஆபூர்வமாகி விடுகிறதே ? படுக்கைகள் தயார் நிலையில் இருந்தன. அப்பாவையும் அம்மாவையும் விளித்தாள் பார்வதி. அவர்களோ விழித்தனர், பார்வதி சொன்னாள் : 'நானே கனவிலேகூட நினைச்சுப் பார்த்திராத வகை யிலே சாயரட்சை விரும்பாத சம்பவம் விரும்பாத முறை யிலே, முறை தப்பி நடந்து போச்சு, இது நான் எந்த