பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92


வகையிலேயும் காரணம் ஆக மு டி யா து ங் க. எல்லாத்துக்குமே மாப்பிள்ளையாகி மாயமாய் வந்த மிஸ்டர் நாராயணன் தான் காரணம் ... அன்று இரவு பார்வதி-அப்பா அம்மாவை அழைத்தாள், சொன்னாள்: "வெறும் வியாபார நோக்கமும் மோக வெறியும் கொண்டு என்னைப் பெண் பார்க்க வந்தவரோட மனிதத்தன்மை தடம் புரண்ட ஈனப் புத்தியை அவரோட வாய்ப்பேச்சே அம்பலப் படுத்திடுச்சு. வாழ்ந்து கெட்ட நம்ம குடும்பத்தோட மூன்றாம் பேருக்குத் தெரிஞ்சிராத கஷ்ட நஷ்டங்களையெல்லாம் ஈடு வச்சுக்கிட்டு இரக்கத்தின் பேரைக் காட்டி, வரதட்சணை வேண்டாம் அப்படின்னு அப்போதைக்குக் காரியத்தை முடிச்சுக்கிடச் சொன்ன தெல்லாம் போலித்தனமான பாசாங்கு என்கிற உண்மையை என் ஒருத்தியாலேதான் புரிஞ்சுக்கிடவும் முடியும் கல்யாணம் என்கிறது ஆயிரம் காலத்து பயிர்னு வாய்க்கு வாய் எல்லாரும் சகஜமாய்ப் பேசிக்கிங்க. அந்த கல்யாணப் பயிரைக் கேவலம், ஒரு அஞ்சு, பத்து வருஷத்துக்காச்சும் வாடச் செய்திடாம, இவங்க காப்பாத்திடுவாங்க என்கிற சத்தியம் என் நெஞ்சிலே உறைக்கவே மறுத்திடுச்சுங்களே ? - நான் என்ன செய் யட்டும்? உங்க தூக்கத்தையும் இனிமேலும் கெடுத்திட்டா, அந்தப் பாவமும் என்னை சும்மா விடாது ! -- முடிஞ்சமுடிவாய்ச் சொல்லிட்றேன் ; ந ல் லா ய் க் கேட்டுக்கங்க நீங்க ரெண்டு பேரும் கண் பார்க்கவும் மனம் பார்க்கவும் கூடிய சீக்கிரத்திலேயே, எனக்குப் பிடித்தமான உண்மையான ஒரு மனிதரைத் தேடிக் கண்டுபிடுச்சு, உங்க ரெண்டுபேரோட ஒப்புதலின் பேரிலே, நானும் அந்தப் புண்ணியவானும் மாலையும் கழுத்துமாய் வந்து நின்னு உங்க ரெண்டுபேர் கிட்டவும் ஆசீர்வாதம் வாங்கிக்கிடுவோம்!... இது சத்தியம்' மெளனம் கனத்தது.