பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94


முருகையன் நின்றான். விவரம் கேட்டான், கேட்டதும் மனப்பூர்வமாக வருந்தினான். அப்போதைக்கு அவனால் செய்ய முடிந்தது அது ஒன்றுதான்!- பிறர் நிலைகண்டு வருந்தவாவது இந்த விசித்திரமான உலகத்திலே ஒர் ஆத்மா காத்திருக்கிறதே!. பார்வதி முருகையனின் சைக்கிள் ரிக்ஷாவில் ஏறிக் கொண்டாள். ஞாபகங்கள் நெஞ்சில் ஏறிக் கொண்டன. மாதங்கியைப் பற்றி முருகையன் சொன்னதெல்லாம் உண்மையான நடப்பாகத்தான் இருக்குமோ? நினைக்கவே கூசியது, சமுதாயத்தை வாழச்செய்து அதன் மூலம் நாட் டையும் வாழ்த்தக் கடமையும் கண்ணியமும் கட்டுப் பாடும் கொண்ட மனித ஜன்மங்களே நாட்டுக்கும் வீட்டுக்கும் விரோதிகள் ஆவதா ?- துரோகிகள் ஆகி விடுவதா ? தட்டிக் கேட்க ஆள் முளைக்க வேண்டாமா ? வெயில் சூடேறுகிறது. வி. ஐ. டி. நகர் பின்னே தங்கியது. பார்வதி திடுக்கிட்டாள் , வழியில் அதே டேஞ்சர் சிக்னல் காரிலே, சமூகப் பாதகி மாதங்கியோடு, இப்போது செந்தில் நாதனும் பறந்து கொண்டிருந்தான்!...