பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97


தடவையாகிலும் அவள் தன்னுடைய கல்யாணப் பிரச்னையில் மூழ்கித் திக்குமுக்காடிப் போய்விடுகிறாள்:மிச்சம் : டென்ஷன் ! அலுவலகம் செல்ல, இன்னும் ஐந்து நிமிஷம் பாக்கி. பார்வதி சடக்கென்று பூசை அறைக்குள்ளே பிரவேசித் தாள் ; கரங்களை ஒருமையுடன் குவித்தாள் ; 'தாயே உன்னோட சின்னப்பொண்ணுக்கு உண்டான ஒரு சின்னக் கலியாணத்தை இனிமேலாச்சும் நீ பண்ணிவைக்க ஆசைப்படப்படாதா?. அப்பா, அம்மாவோட மோச மான உடல்நிலை சதா என்னைப் பயமுறுத்த, நான் அவுங்க ரெண்டு பேரையும் சதா சர்வகாலமும் பயமுறுத்த இப்படியே தொடர்ந்துக்கிட்டே இருக்கிற பயங்கரமான நரகவேதனையிலேயிருந்து எங்க மூன்று பேரையும் காப்பாத்து, தாயே!- அப்பதான் நானும் உயிரோடு இருப்பேன் ; அப்பா, அம்மாவும் உயிர்தறிக்க முடியும்:-பிரார்த்தனையின் இதயம் ஓலமிட்டது : இதயத்தின் விழிகளும் ஒலமிட்டன, விரிந்த நீர்த்திரையில் பிரிந்த மனித முகங்களின் நவீன பாணிச் சித்திரங்களின் கிறுக்கல் களுக்கு மத்தியில் செந்திலும் தென்படவே, அவள் அதிர்ந்தாள், வேர்த்துக் கொட்டியது. யார் இந்தச் செந்தில் நாதன் ?- இந்தச் செந்திலை நினைக்க நான் யார் ?- விழிகளுக்கும் வேர்வை கொட்டும்!- அவளுக்கு என்னவோ செய்தது ; பிரமை தட்டி நின்றாள். 'அம்மா! எதெது எப்படி எப்படி நடந்து தீரனும்னு எழுதிப் போட்டிருக்குதோ, அதது அப்படி அப்படிதான் அணு பிசகாமல் நடந்துதான் தீரும்:- அந்தச் சூத்திரத் தையும் சூட்சுமத்தையும் நம்மாலே அறிய முடிஞ்சுதின்னா "அப்பவே, நாமளும் கல்லாகிக் கடவுளாகிட மாட்டோமா?. சரி, சரி : முதலிலே உன் பசி பாட்டை யாச்சும் தீர்த்துக்க !’ சிவகாமிதான் பேசுகிறாள். தே-7