பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99


செந்தில்நாதனும் செந்திலுமான அந்தச் சீமான் வீட்டுச் செல்வப்பிள்ளை அன்பே உருவமாகவும், அழகே வடிவமாகவும் சொகுசான ரோசாப்பு நிறக் காரிலிருந்து வெகு பதற்றத்தோடு இறங்கினான் ! 'குட்மார்னிங், மிஸ் பார்வதி என்று கூறி, வணக்கம் கூறினான் : நாகரிக மாகப் பார்வையைச் சிரம் தாழ்த்தியபடி, மயில் கண் ஜரிகை வேட்டியைத் தரையிலே புரளவிடாமல் நாசூக்காக இடுப்பில் இழுத்துச் செருகிக் கட்டிக் கொண்டான் ! - உலக இளைஞர் ஆண்டின் மேல்தட்டுப் பிரதிநிதியா இவன் இவன் எங்கே வந்தான் ? ஏன் இங்கே வந்தான்? பாதை மாறி வந்து விட்டானா ? அல்லது பாதை தவறி வந்துவிட்டிருப்பானோ ? கும்பிடு வாங்கிக் கும்பிடு கொடுத்தாள். வழக்கம் மாறாமலே, கண் ஜாடையாகப் பெற்ற அனுமதியுடன், கைஜாடையாக ரோஜாப் பூவைப் பறித்துக் கொண்டு வந்து நின்றான் செந்தில். "நீங்க நல்லா இருக்கீங்களா ?' என்று அன்பாகவும் அன்பிற்காக நலம் விசாரித்தான் அவன். 'ஒ' புன் சிரிப்பு. அவனை ஆழ்ந்து நோக்கினாள் அவள். அந்தப் பார்வையின் அன்பும் பாசமும் நயமும் நாகரிகமும் அவனை என்னவோ செய்திருக்க வேண்டும்!- ஒப்பிட்டுக் காட்டவோ என்னவோ, மயிலாப்பூர் மாப்பிள்ளைக் காரன் நொடிக்கு நூறு தரம் மோக வெறி துள்ள அவளை அவளது கவர்ச்சி கனிந்த, இளமை பொங்கிப் பொங்கி வழிந்த மேனியைப் பார்த்த-பார்த்துக் கொண்டேயிருந்த அநாகரிக காட்சி அவள் நெஞ்சில் படமெடுத்தது செந்திலின் பார்வை அவளுக்கு இதமாகவே இருந்தது. ஆகவே, புன்சிரிப்பு வந்தது; சந்தோஷமும் வந்திருக்கக்