பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100


கூடும், அவளுக்குக்கூட சந்தோஷமான கனவுகள் தோன்றும் போலும் மறுகணம், அவள் கண்கள் திறந்தன:- நான் யார் ? இந்தச் செந்தில் யார் ?... நான் எங்கே இந்தச் செந்தில்நாதன் எங்கே '-இப்போது அவள் இருதயத்திலும் வேர்வை சுரக்கிறது. சமாளித்துக் கொண்டாள். அவள் சாமர்த்தியம் வேறு ஒருத்திக்கும் வராது ! வெய்யிலில் சூடு தெரியவில்லை. ஏங்க..?' செந்தில். பார்வதி; என்னங்க ?” 'வந்து...' 'வந்து...' 'உங்களாலே...' 'உங்களாலே.ஊகூம், என்னாலே?" 'ஒரு அவசரமான, முக்கியமான, உயிருக்கு ஒப்பான நல்ல காரியம் நடந்தாகனும்: அதுக்கு நீங்க மனசொப்பி எனக்கு ஒத்தாசை செய்யவேணும் ?...” 'மிஸ்டர் செந்தில் கண்ணைத் துடைச்சுக்கிடுங்க. என்னாலே முடிஞ்சால் செய்றேன்; முடிஞ்சதைச் செய் றேன்; கட்டாயமாய்ச் செய்வேன். ஊம், சீக்கிரமா விஷ யத்துக்கு வாங்க !' 'சீக்கிரமா நீங்க என்கூட எங்க வீட்டுக்கு வர வேனும் !' "நீங்க என்னா பேசுறீங்க, மிஸ்டர் செந்தில்நாதன்." 'உங்களாலே என்னை நம்பவே முடியலையா, மிஸ் பார்வதி?”