பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H2 ஞாலம் போற்றிடும் ஞாயிற்றுக்கிழமை ! பராக்...பராக்...பராக் ! கதிர் முத்தங்கள் நிலைப்படியில் முத்தம் பதிக்கின்றன இப்பொழுது. பார்வதிக்குக் கொட்டாவி கொட்டாவியாக வருகிறது அரை நாழிகை படுத்து எழுந்தால் உடம்பு கலகலப்பாக ஆகிவிடும். நேரம் எங்கே இருக்கிறது ? அடுப்படியில் ஒடியாடி வாய்க்கு ருசியாகத் தோசை சுட்டுப் போட்டு விட்டாள் அம்மா. அவள் உடம்புக்கு இதுவே பத்திரிகையிலே போடக்கூடிய பெரிய காரியம். திரும்பவும் ஒரு மூச்சு உறக்கத்தின் காலடியில் சரணாகதி அடைந்தாள். அப்பா எங்கே போய் விட்டார் ? - எங்கேயும் சொல் லாமல் கொள்ளாமல் போய்விட மாட்டார். பக்கத்து வீட்டுப் பாப்பாவோடு கொஞ்சிக் குலவிக் கொண்டிருந் தார். பேசும் பொற் சித்திரத்தைப் பேசாத சித்திரமாக்கி ரசிக்கவும் பார்வதி தவறி விடவில்லை ; ஏக்கப் பெருமூச்சு கீறிப்பாயவும் தவறவில்லை. பார்வதி பி.ஏ., பக்கத்துக்குப் பக்கம் இலக்கிய விருந்து படைத்தாள். ஒரு நாடகம்,..... தே-6