பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82


“உங்களைத் தானே ! பாருக்குட்டிக்கு நாம சீக்கிரமா கல்யாணத்தை முடிச்சி வச்சிட்டோம்னா, நாம ரெண்டு பேரும் சீக்கிரமா உடம்பு தேறி, எப்பவும் போல புதுத் தெம்போட நடமாடத் தொடங்கிடலாமுங்க ' என்று அம்மாக்காரி நயமாகப் பிரசினையை முன்மொழிய, நி சொல்றது சரியான நியாயந்தான் ; தாள தசை கூடி வந்தாச்சின்னா நம்ம அருமைப் பாருக்குட்டியோட கல்யாணம் காட்சியும் பெருமையோடே கைகூட நடந் திடும். நம்ம பொண்ணை மாலையும் கழுத்துமாகப் பார்த்தால்தான். உண்மையிலேயே நீயும் நானும் தெய்வக் காட்சியாகவும் கொடுத்து வச்சவங்களாகவும் ஆவோம் ! என்று பிரச்னைக்கு ஆதரவாக அப்பன்காரர் வழிமொழிய கடந்த சிலபல நாட்களாகவே உக்சக்கட்டக் காட்சியாக நடந்து வரும் பார்வதி கல்யாணம்’ நாடகம் விடிய காலையிலே கூட நடந்தது : ... கோடை வானம், சொல்லாமல் கொள்ளாமல் மப்பும் மந்தாரமுமாக ஆயிற்று. வெட்டிப் பாய்ந்த கொடி மின்னல் அக்கணத்தில், குமாரி பார்வதியின் இளைய மனத்தையும், முதிர்ந்த காட்சியையும் சுற்றி வளைத்துக் கீறிப் பாயவே, அவள் பிரமை தட்டி எழுந்தாள் - ஒரு சங்கதி எனக்கு இப்ப நல்லாவே புரிஞ்சிடுச்சு ; அம்மாவுக்கும் சரி, அப்பா வுக்கும் சரி. இப்போதுள்ள தலைவலிப் பிரச்னையே, ஊகூம் நெஞ்சுவலிப் பிரச்னையே நான்தான்! ... இந்த அளவுக்கு நான் பாவி ஆகிட்டேன் ; பாவியிலேயும் பாவி, கொடும்பாவி ஆகிப்பிட்டேன். இப்படிப்பட்ட பழி பாவத்தை நான் இந்த ஜென்மத்திலேயே எப்படித்தான் தீர்த்து வச்சு, அன்னைப் பெற்றெடுத்தவங்களுக்கு எப்படித்தான் மங்களகரமான மனச்சாந்தியைத் தேடிக் கொடுக்கப் போறேனோ ? அந்தத் துப்பு எல்லாம்வல்ல ஆண்டவனுக்குத்தான் அர்ப்பணம் !’