பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83


மழைக்கும் ஆசபாசங்கள் உண்டு ; கொட்டித் தீர்க்கிறது. பார்வதி நெஞ்சின் நிரடல் திரக் கண்களை மூடிக் கொண்டாள் - தற்காலிகமாகத்தான், நினைவில் பேயாட்டம் போடத் தொடங்குகிறாள், புதிய பூலோகத்தின் புதிய ரம்பை மாதங்கி : ... சே! இவள் மாதிரியான சமூகப் புல்லுருவியெல்லாம் ஏன்தான் உயிரோடு இருக்கு துங்களோ ? சே !.., கண்களைத் திறந்தாள். செந்திலைப் பற்றி மாதங்கி பேசும்போது, அவர் உன்னை உசிருக்கு உசிராகவே காதலிச்சார்; அது சாமானியப்பட்ட காதல் இல்லை. முதல் காதலாக்கும்!’ என்று குறிப்பிட்டது நெஞ்சடியில் நெருஞ்சி முள்ளாகத் தைத்திருக்க வேண்டும். உள்ளே கூடத்துக்கு ஓடித் திரும்பினாள். எதிர் வரிசையில் ஜெய் வேதாளம் பங்களாவில் காலத்தின் சத்தம் பத்துமுறை கேட்டது. அதுவரையிலும் அவளுக்கு வந்திருந்த காதற் கடிதங்கள் அத்தனையையும் ஒரே குவியலாகக் கொட்டிய பின், அவை ஒவ்வொன்றையும் இப்போது தனித்தனியே பிரித்து வைத்துக்கொண்டு அனுசரணையோடும் அனுதாபத்தோடும் மறுபரிசீலனை செய்யத் தொடங்கினாள். புத்தக அலமாரியில் இடைச் செருக்கலாகத் தென்பட்டது. புதிய கடிதம் ஒன்று, உரிய நேரத்தில் வந்த அக்கடிதத்தை அப்பா உரிய நேரத்தில் என்னிடம் சேர்ப்பிக்க மறந்து, கடிதங்களோடு கடிதமாகச் செருகி வைத்திருக்க வேண்டும். அந்தக்கடிதத்தின் அடியிலே தென்பட்ட பி. செந்தில் நாதன்' என்கிற பெயரைப் படித்தவுடன், இனம் விளங்காத தவிப்பின் உறுத்தல் அவளை என்னவோ செய்திருக்கவும் வேண்டும்.