பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 81. சிவபிரான் - தன்மை முதலிய 87: H. நீர் அவ: ஒருமாத்திரைப் பொழுதில் உலகமெல்லாம் புகுவா அவர்; மூவுலகங்களையும் படைத்து உகந்தவர் அவர்; உலகங் களே உண்டு உமிழ்ந்த திருமாலை உடையவர் அவச். (17് ഉണു (68 (60) அளவிலாக பல ஊழி கண்டவர் பெருமான். ஊழி ஏழான ஒருவர் அவர். ஊழித் தீ போன்றவர் - ஊழி முதல்வர் அவர். பெருங்கடல் பொங்கி எழுந்து பிரளயமாய் உலகை மூடிப், பிரமனும் இறக்க அவன் எலும்பையும், கிருமாலின் எலும்பையும் பூண்டு எலும்பாபரணராய்ப், பொங்கிய கடல் மீண்டடங்க, எம்பெருமான் கமது நல்ல வினையை வாசிப்பார். (18) ஊன், உடல், உயிர் (68 (68)) உடலினில் உள்ள உயிர் .அவர் ; ஊன் அவர், உயிர் அவர்; உயிர்களுக்கெல்லாம் கண் அவர்; கரு அவர்; உலகத் அக்கே உயிர் அவர். உயிர்க்கெல்லாம் உற்ருரும் பெற்ரு ரும் ஆய பிரானர் அவர் எல்லா உயிர்க்கும் இறைவர் அவர். பல உயிர்களாகி எங்கும் பரந்தவர் அவர். பல உயிர்களையும் விதிப்படி படைத்தவர் அவர். (19) எங்கும் பரந்த உள்ளவர் (68 (65)) எவ்விடத்தும், எத்திசையிலும், மூவுலகத்திலும், உள்ளவர் அவர். உலகெலாம் காம உலாவிய தன்மையர் அவர் ; ஒழிவற கிற்பவர் அவர் ; கிருமால், பிரமா, தீ, காற்று, கடல், மலை இவைதமுட் கலந்து கிற்கும் பெரியார் அவர். எங்கும் பரந்துள்ளவர் அவர்; பல உயிர்களாய்ப் பரந்துள்ளவர் அவர் ; மண், விண், கடல், விசும்பாகப் பாங் துள்ளவர் அவர். (20) எண்ணும், எழுத்தும் (68 (67)) எண்ணுனவர், எழுத்தானவர், சொல்லானவர், பேர் எழுத்து ஒன்று (ஒம்) உடையவர்.