பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்புர்). தேன், பால், கரும்பு இவைகளின் சுவைகளை வடித்தெடுக்க தேறல் இரவும் பகலும் கினைந்தபோதெல்லாம் இனியர் அவர் ; பேசப் பெரிதும் இனியர் : , அடியார்க்குக் கட லமுதம் போன்றவர். | (18) ஈபவர் (6.8 (45)) அடியார்கள் வேண்டினதை ஈபவர் இறைவர். (14) உடையவர் (6.8 (47)) நமையெலாம் உடையவர் அவரே. (15) உணர்வு, உணர்த்துபவர் (6.8 (49)) உள்ளே புகுந்து நின்று உணர்வினுக்கு உணரக் கூறும் உணர்வு இறைவர். ஊன், உயிர் இவற்றுள் கின்ற உணர்வு அவர். அவரால் உணரப்படாதது ஒன்றும் இல்லை (1) உலகமும் ஊரும் (68ருவ அனைத்துலகும் ஆனவர் இறைவர்; உலகமே அவருக்கு உடை; அவர் உலகங்களைப் படைத்தார், அடங்கக் கொண் டார்; உலகை ஆள்கின்ருர் வானேர் உலகை ஆள்பவரும் அவரே. உலகெலாம் நிறைந்து நின்ற சிறப்பினர் அவர். உலகத்துக்கு உயிர் ஆனவர் அவர்; எல்லா உலகங்களையும் வைப்பவர், களைபவர், வருவிப்பவர் அவர்; உலகங்களுக்கு வித்து அவர்; ஏழுலகும் அவரே, மூவுலகும் அவரே ; எல்லா உலகங்களையும் காத்து ஊட்டி நிற்பவர் அவர். ஊரிலாதவர் அவர், ஆயினும் ஊர்களொடு ஒன்றி நிற்கின் ருர் அவர் உயிர்களின் ஊனில் இயங்கி, உலகெலாம் உலவு பவர் அவர்; உலகுக்கு எல்லாம் வினே, பிறப்பு, வீடு ஆகி கிற்பவர் அவர் ; உலகங்களுக்குக் கண்ணுகி கின்று அவை களைக் காக்கின்ருர் அவர். உலகங்களின் கரு அவர், தாய் அவர்; அவரின்றி உலகம் இல்லை ; தேசம், நாடு எல்லாம் உடையவர் அவரே. பார், விசும்பு, பாதாளம் எல்லாம் அவர். பூலோகம், புவலோகம், சுவலோகம் ஆகிய எல்லாம் f