பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) s (21) எதிர்பொருளாவார் அவர் (68 (68)) இறைவர் எதிர்மறைப் பொருள்கள் ஆவார் என விளக்கப்பட்டுள்ளார். உதாரணமாக, அவர் அங்கமும் ஆவர், ஆகியும் ஆவர். உகப்பார் - முனிவார்; உறவாவர் - பகை யாவர்; பரியர் - துண்ணியர் ; பின்னன் முன்னன்; பெரியார் - சிறியார்; விரிந்தான் - குவிந்தான்; வெய்யான் - தனியான். (22) எதுவும் அல்லர் (68 (69) பிரானர் மண், விண், மலை, கடல், வாயு, எண், எழுத்து, எரி, இரவு, பகல், பெண், ஆண், பேடு-இவை எவையும் அல்லர். ஆயினும் பெரியார் அவர். (28) எல்லாம் அவரிடம் உண்டு (68 (70) எல்லா வாய்ப்பும் அவரிடம் உண்டு. அவரிடம் இல்லா தது ஒன்றும் இல்லை. (24) எல்லாம் ஆவர் (68 (71)) இறைவர் அனைத்தும் ஆனர்; அனேத்தும் காமாய் கிற்கின்ருர். எல்லாம் சிவன் என்ன கிற்கின் ருர். எவ்வுயி ரினும் நீங்காது இருக்கின்ருர், காமன்றி வேருென்றும் இல்லாது விளங்குகின்ருர். கிற்பனவும் நடப்பனவும் அவரே ; மூவுலகும் தாமாய முதல்வர் அவர். (25) ஏணி (68 (79)) அடியார்க்கு முத்தியை அடைதற்கு உதவும் ஏணி இறைவன். (26) ஒப்பிலி (68 (88)) இறைவருக்கு இணையாவர் அவரே. தமக்கு ஒப்பாவார் இருக்கமுடியாக வன்மை வாய்ந்தவர் அவர்: அவருக்கு ஒப்பாவார் யாரும் இலர்.