பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) + = I s' நன்மை தரும்படி செய்வார். கஷ்டங்களை நீக்குவார். பிறவி நோயை அகற்றுவார் ; நோய்வினை வாராவண்ணம் காப்பார்; அடியார்தம் பிணிகளைக் களைவார். மந்திரமாகவும் தந்திர மாகவும் மருந்துமாகவும் உதவித் தீர ந்ோயைத் தீர்ப்பார்; மூலநோய் தீர்க்கும் முதல்வர் அவர்; வாடை தீர்க்கும் மணி அவர். உலகிற் பிணிகளை எழுபிறப்புக்கும் வைத் தவர் அவர். (82) படைத்தல்-காத்தல்-அழித்தல் 168 (2.18) ஆக்காமலே எல்லாவற்றையும் ஆக்கினவர் இறைவர். உலகங்களைக் காப்பார், அழிப்பார், படைப்பார்; ஏழுலகங் களையும் ஆக்கினர் ; பூமி, கடல் இவைகளைப் படைத்தார் ; கண்ணுய் கின்று உலகங்களைக் காக்கின்ருர் ; படைத்தற் கடவுளாய் நின்று பல உயிர்களிடத்தும் அன்பு காட்டு கின்ருர். I (88) பந்தமும், வீடும் (68 (2.18) அண்டங்களின் எண்டிசையிலும் பந்தத்தையும் வீட டையும் இறைவர் பரப்பியுள்ளார். பந்தமும் வீடுமாகி விளங்குகின்ருர் ; பந்தத்தைத் தீர்க்கும் பெருமான் அவர் ; பந்தமே தமக்கு இல்லாதவர் அவர் முக்கன் அவர். (84) பலவும் ஆனவர் (68 (224)) அடிகள் உருவங்களாகவும் உயிர்களாகவும் ஆகி வினைப்பிறப்பின் விடுதலையாய் கிற்பவர். சிந்தையுட் சிந்திக் கின்ற பல எண்ணமும் ஆவர் அவர் ஞாயிறு, நமன், வருணன், சந்திரன், அக்கினி, கிருதி, வாயு-ஆக விளங் கும் திவ்விய சாந்தமூர்த்தி அவர்; பூமியாய், பூமியில் 2ள்ளவர்க்குத் தந்தைபோல கிற்கின்ருர் அவர். (85) பவளம் (68 (225) கண்ணிறைந்த கனத்த பவளத்திரள் பகவான். செழும் பவளத்திரள், நீறு பூத்த செழும்பவளக் குன்று அனையவர் அவர். செஞ்சுடர்ச் சோதிப் பவளத்திரள் அவர்,