பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. சிவபிரான் - கனமை முதலிய 107 பிடத்தில் அவரும் பொய்யிலாதவராய் விளங்குவார். பொய் பிலாத மெய்யர் அவர் விருப்பம் இல்லாக இரும்பு மனம் கொண்ட வினேயர்க்கு இறைவன் என்றும் பொய்த்தவன். (102) பொருள் [68 (257, 283, 15)] இறைவர் அரிய பெரும் பொருளாகி நிற்பவர். பிரமன் , மால் ஆய்ந்தும் காணுத பொருள் அவர். அறிகற்கு அரிதான் துண்பொருள்கள் ஆயினவர் ; ஆறங்கம், கால்வேதம் இவை தமக்கு அப்பால்.கின்ற பொருள் புகழ்சேர் பொருளுக்கு என்.றும் உறைவிடம்; ஒங்காரத் து உட்பொருள், ஒங்காரத்து மெய்ப்பொருள் (தலைப்டி 29); கலைப்பொருள், செம்மைப் பொருள்; சொல்லார்ந்த பொருள், காயாக நின்று உலகுக் கெல்லாம் உதவும் பொருள், சுடர்களிலும் வானிலும் விளங்கும் பொருள். கோற்றம், கிலே, இறுதி இல்லாத பொருள் ; நம்பினேர்க்கும் பற்றிலார்க்கும் அரும் பொருள் ; நல்ல சுற்றமாய் விளங்கும் அரும்பொருள் ; நாம் நாடுகின்ற நற்பொருள்களானவர் ; நால் வல்லோர்க் கெல்லாம் நுண்பொருளாய்த் திகழ்பவர். சொல்லப்படும் இன்சொற்பா நிறைந்த பொருளாளர்; பிண்டத்திற் பிறந்த பொருள்; எவற்ருெடும் புணர்ந்து கிற்கும் பொருள்; தேவர்கள் போற்றும் பொருள் ; மூவுலகத்துக்கும் பொரு ளாகத் திகழும் புனிதப்பொருள். பூமிமேற் புகழ்தக்க போருள். வேதம் துணிந்து கூறும் பொருள். விரும்பிப் போற்றும் அந்தணர்களின் மறைப்பொருள். இறைவர் பொருள் உடையரும் அல்லர், பொருள் இல்லாதவரும் அல்லர். மெய்ஞ்ஞானத்து மெய்ப்பொருள் அவர், மெய்ப் பொருட் பயன் அவர், விரிக்கின்ற பொருள்களுக்கெல்லாம் வித்து அவர். பெரும்பொருள் அடங்கிய சொல்லார் இறைவர். (108) பொறை (68 (258)) ஏழுலக பாரத்தையும் காங்கி கிற்கும் பொறுமையாளர் இறைவர்; நஞ்சை உண்ட பொறுமையாளர் அவர் தமி களின் பாரத்தைத் தீர்ப்பவர் அவர்.