பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) 7. நல்லூர் : இங்குத் தேவர்களும் தொழப், பண் ணிட்ட பாடலுடன் எப்போதும்' ஆடல்புரிகின்ருர் அண்ணல், 8. நள்ளாறு : இங்கு நாகம் ஆண்டு கூத்தாடுகின்ருர் அண்ணலார். s 9. நெய்த்தானம் : இறைவனுடைய கூத்து கிலயம் நெய்த்தானம். * II 10. திருவிழிமிழலை : இங்கும் இறைவன் கூத்து நிகழ்த்துகின்ருர். 89. சிவபிரான் படை (78) சிவபிரானுடைய படைகளுள்: அம்பு, கட்டங்கம், கையலகு (?), குலம், பாசுபதம், மழு, வில், வேல் கூறப்பட்டுள. அவருடைய 1. சூலம்-கூர்மை கொண்டது, அலங்காரமும் அழகும் கொண்டது, இரும்பாலாயது, எரியும் தன்மை கொண்டது, கறை படிந்தது, கூர்மை கொண்டது, கொலைசெய்ய வல்லது, கோபம் உடையது, சில மணிகள் கட்டப்பட்டது, சூரியன்-சந்திரன்-அக்கினி என்னும் மூன்று சுடர்களின் சூடு வாய்ந்தது, பரிசுத்தமானது, மாமிசத்திற் படிவது, மின்ைெளி கொண்டது, மூவிலையது. 2. மழு-எரியும் தன்மையது, ஒளி உடையது, கொடியது, கொலைத் தொழில் வல்லது, சிறந்த வெண் னிறத்தது, பரிசுத்தமானது. 8. வில்-ண்ேடது, கொலைக்கு உரியது. 4. வேல்-இலை போன்றது, கூரியது. 90. சிவபிரான் பராக்கிரமம் (79) (1) அரி, அயனே, அடக்கி, அவர்களுக்கு அருளியது (2) தேவர்களுக்கு அமுதளித்தது (8) சிலந்தியை அரசாள