பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) பாம்புரம், பெரும் புலியூர், பெருவேளூர், மயிலாடுதுறை, மறைக்காடு (வேதாரண்யம்), மாற்பே.அ, (அதிகை) விரட்டம்--இவை சிவபிரான் விரும்பும் தலங்களாகக் கூறப் பட்டுள. Y ( 96. சிவபிரான்-வேட்ங்கள் (86) ஆடல் வேடம், கங்காள வேடம், காபால வேடம், கோடால வேடம் (பிறைமாலை வேடம்), ஞான வேடம், பண்டரங்க வேடம், பலிகேர்விடங்க வேடம், பாசுபத வேடம், பிஞ்ஞக வேடம், பொல்லாத வேடம், விகிர்த வேடம், விடலை வேடம், வேட்டுவ வேடம், வேறணி வேடம் (புதுமை வேடம்) ஆகப் பல பல வேடத்தர் சிவபிரான். 97. சிவபிரான வைதல் (புகழாப் புகழ்ச்சி) [87] ஊர்ப் பிச்சையான், ஐயமுண்ணி, கள்வன், கூற்றுவன், கொடியவன், கொல்லும் நஞ்சு, கொலையவன், அட்டர், படிறன், பித்தன், வஞ்சகக் கள்வர், வஞ்சகன், வெய்யன்எனவரும் வைகற் சொற்கள் ஆளப்பட்டுள. 98. சிவனும் இசையும் (88) ஆரியம், தமிழ், இசை-இவை மூன்றும் ஆனவர் சிவளுர், கேம் பாடின இராவணனுக்குச் சிவபிரான் அருள் புரிந்தார் ; வாள் அளித்தார். கொண்டர்கள் இன்னிசை பாட இறைவர் இனிது கேட்பார் ; வானுலகம் கொடுப்பார்; நரம்பு வாக்கியங்களுடன் இசைபாட இறைவர் மகிழ்வர் ; ஏழிசை கேட்டு மகிழ்வர் ; ஏழிசை யாழ், வீணே ஒலிக்கக் கேட்பர். இருவர் (அம்புரு, நாகர், அல்லது கம்பளர், அசுவதரர்) இசைபாடித் தொழச் செல்வர்; வீணே ஏக்கிக் காந்தாரப் பண் (நவரோஸ்), சீகாமாப்பண் (நாதநாமக் கிரியை) பாடிச் செல்வர் ; பண் கொல்லி (நவரோஸ்) அவருக்குப் ப்ரீகி ; சாமவேத கீதத்தை விரும்புவர். கிாம்ப இசைபாடுவாருக்கு ஞானக்கை அளிப்பார். பண் பஞ்சமம்