பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) s s அவர் ஆக்கின இசைகள், அவர் படைத்த உலகம், ஊழி, கடல், மலை, பிறப்பு-இவை எலாம் ஏழு. அவர் குணம், அவர் படைத்த திசைகள், அவர் கோள், அவர் குடும் மலர்கள்-இவை எலாம் எட்டு. அவருடைய மூர்த்தி உருவங்கள், சடைகள், பூனூல் இழைகள், அவர் வகுத்த உடலில் உள்ள வாயில்கள், அவருடைய பூதகண வகைகள்-இவை எலாம் ஒன்பது. அவருடைய அடியார்களின் செய்கைகள், அவர் பாம்பின் கண், பாம்பின் பல், அவர் நெரித்த இராவணன் தலை-இவை எலாம் பத்து. H அவர் கண்கள், சடைகள்-இவை எண்ணிலாதன. அவர் பன்னிரு ஆதித்தராகவும், பதினெண் புராணங் களில் விளங்குபவருமாகத் திகழ்கின்ருர். 100. சிவனும் கதிர்களும் 190) சிவன் (இறைவர்) கதிர்களில் விளங்குகின்ருர். அவர் தான் கதிர்கள் இரண்டையும் விசும்பில் வைத்தவர். அக் கதிரோர்களால் அறியப்படாதவர் அவர். கதிர்களை (சந்திரன், சூரியன், அக்கினி) தக்கன் யாகத்தில் அவர் கோபித்துள்ளார். 101. சிவனும் காளியும் (91) சிவபிரானக் காளி பூசித்த தலம் கிருமங்கலக்குடி. காளி இறைவனுடன் கடம் ஆடினது.--கலைப்பு 88 பார்க்க. 102. சிவனும் கொன்றையும் (92) இறைவர் அழகிய கொன்றை மலரில் வாசம் செய் கின்ருர். கொன்றை மலர் பிரணவ ரூப மலர் ; தாம் பிரணவப் பொருள் என்பதைக் குறிக்க இறைவர் அம் மலருள் உள்ளார். இதுவே அவர் கொன்றை குடும் குறிப்பாகும்.