பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அபபா) வெற்றிவாயிலில் வற்றிக் காத்துக் கிடப்பர்; முப்போதும் சயசய என்று சிவனது இணையடியிற் பணிவர். ஞாயிற்றின் வெப்பத்தைத் தணிக்கும் முகிவர்கள் சிவபிரான விரும்பிப் போற்றுவர். ஞாயிறு பூசித்த கலம் திருச்சோற்றத்துறை. 106. சிவனும் தமிழும் வடமொழியும் (96) ஆரியமும் (வடமொழியும்), (செங்)தமிழும் சிவபிராற்கு உகந்தவை. அவரே ஆரியன், அவரே தமிழன்; அவரே வடமொழியும், தென்தமிழும் (முத்தமீழும்), நான்மறை யும். உண்மைப் பொருளைக் குறிக்கும் பெருமை பொருந்தி யது தமிழ். i. 107. சிவனும் தானவரும் (97) தானவர்க்கு (அசுரர்களுக்கு)க் கலைவர் சிவனர். தானவர் அவரை மலர்கொண்டு கித்தம் பூசிக்கின்றனர். அப்படிப் பூசித்தும் கானவர்களால் அறியப்படாத தன்மை யர் இறைவர். சிவனே தானவர்க்குச் செல்வம் ஆவான். 108. சிவனும் திருநீறும் (99) (i) சிவபிரான் அமுகயோக நீற்றர். இளம்பிறைபோல வெண்ணிறு புனேந்துள்ளார் அவர் ; நெருப்பனைய அவ ருடைய செம்மேனியில் வெள்ளை நீறு விளங்கும் ; பவள கிறங் கொண்ட அவருடைய எட்டுத் தோள்கள் மீதும், மார்பிலும், உடல் முழுமையும் வெண்ணிறு பொலியும். தமது நெற்றியில் வெள்ளை நீற்றைப் பூசி, அதன்மேலே திங்களைப் (பிறையை)த் திலகம்போலப் பதித்துள்ளார் ; பூதி அணிந்துள்ள பொன்னிறத்த மேனியர் அவர். திருமால், பிரமன் இவர்தம் உடல் வெந்து அவிய, அந்த நீற்றை அவர் அணிகின்ருர். விலையில்லாத சாந்தமென்று திருநீற்றையே சாந்தமாக (சந்தனமாக) அணிந்துள்ளார். அவருடைய திருநீற்றின் வண்ணம் (பொலிவு) அவருடைய புகழ்பெற்ற ஊர்தியின் (ஏற்றின்) பொலிவை ஒக்கும்.