பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) கூத்தாடுவார். (நள்ளாறு சப்த விடங்கத் தலங்களில் ஒன் அறு. தியாகராச மூர்க்கி நரகவிடங்கர் -நடனம் உன்மத்த நடனம்). பெருமானே நாள்தோறும் வணங்கி வலம்வருவாருடைய வினே மாயும் ; . கள்ளா று என்று சொன்னுலே நமது வினே நாசமாம். 90. நறையூர் திருக்கோயில் சித் தீச்சுரம் எனப்படும். இறைவன் இத் தலத்தைவிட்டுப் பிரியார். 91. நனிபள்ளி செண்பகம், புன்னே, குரவம், வேங்கை இவை நெருங் கிய சோலை சூழ்ந்த தலம். நனிபள்ளியில் வாழும் இறைவர் தம்மை அடைந்தவர்களுடைய வினைகளைத் தீர்ப்பார், தம்மை கினேக்கும் கினைப்பைத் தருவார், மலத்தை அறுப்பார், நரகத்தில் வீழ ஒட்டார். 92. நாகேச்சுரம் உலகினர் வந்து போற்றும் புனித மூர்த்தி கிருநாகேச் சுரவர். சந்திரன், சூரியர், ஐந்தலை அாவு-பூசித்த தலம் திருநாகேச்சுரம். நாவலம் பெருங் தீவினில் வாழ்பவர் வந்து வணங்கித் தமது வினே, பாவம், பற்று இவைகள் நீங்கப்பெறும் தலம். கிருநாகேச்சுரத்துப் பெருமானேச் சேராதவர்கள் நன்னெறியிற் சேராதவர்கள். தம்மைச் சேர்ந்தவர்களின் வல்வினையைத் தீர்த்துக் குளிர்விப்பார் பெருமான். 93. நாகை (காரோணம் என்னும் தலைப்பு 45 பார்க்க.) கடலையும் கழிகளையும் கழுவிய தலம். கப்பல்கள் சேரும் கடற்றுறைத் தலம். நறுமணம் வீசும் சோலைபொழில்கள் சூழ்ந்த தலம். தாழை மணம் கமழும் கழனி