பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) 147. வன்னியூர் h H H . т HH H ■ க இத்தலத்தில் தாமரை மலரும் வயல்களில் கயல்மீன் பாயும்; அருகே அன்னங்கள் மேயும்; மனங் கமழும் மாடங் களும், மதிலும் சூழ்ந்த கலம் இது. தமது தாளே அடைங் தவர்களுக்கு வான் அளிப்பார் வன்னியூர்ப் பெருமான்; உண்மையுடன் தம்மை கினைப்பவர்களின் வல்வினையைக் தீர்ப்பார் அவர். 148. வாஞ்சியம் குளிர்ந்த வயல்கள் எதிர் எதிரே கூடி விளங்கும் தலம்; பூம்பொழில்கள் சூழ்ந்த தலம். வட்டமாயும் எதிர் எதிரேயும் உள்ள மாடங்களை உடைய கலம், வேதம், வேதாங்கம் இவைகளுடன் செய்யும் வேள்வியாளர்களும், யாகம் செய்பவர்களும் பயிலும் தலம். செங்கண்மால் இடங்கொண்டு (பூசித்த) தலம். சூரியன், அக்கினிதேவன், யமன், தேவர்கள் போற்றும் திருவடியை உடைய பிரான் திகழ்ந்து வாழும் சிறப்பினை உடைய தலம்; கற்றுச் சேர் தரும் அடியார்கள் கருதும் கலம்; விரும்பும் அடியார்கள் பிரிகற்கரிய தலம். இத்தலத்தில் தங்குபவர்கள் தேவர்க்குத் தேவராவர் ; இத்தலத்தைப்பற்றிப் பாடுபவர்களுக்குப் பாவமே கிடையாது; இத்தலத்தை அன்புடன் அடைபவர் களுக்குத் துயர் ஒன்றும் வாராது. இத்தலத்தின் பெருமை தெரிந்து வாழ்பவர்க்குச் செல்வம் உண்டாகும். 149. வாட்போக்கி கின்னாம் என்னும் இசைப்பறவைகளின் ஒலி கேட்கும் தலம். ஆடல் பாடல் விரும்பினவர் வாட்போக்கி நாதர். நிரம்ப அருள்பாலிப்பவர். ஒளிப்பவர்களிடம் தாமும் ஒளிப்பார். குற்றமற்றவர்களிடம் உண்மையுடன் கிற்பார். சீலத்துடன் இருப்பவர்களிடம் செம்மை காட்டுவர். ஆதலால் வாட்போக்கியாரிடம் அன்புவைத்து அவருடைய இணையடிகளை ஏத்தித் துதியுங்கள் ; அவருடைய புகழ்களே எடுத்து உரைப்பீர்களாக ; அவரைத் துதித்து இன்புறு