பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 தேவார ஒளிநெறிக் கட்டுாை (அப்பர்) (4) வாழ்வு எது P. (5) எந்த எந்த ஊர்கள் காட்டின நிகர்க்கும் ? (6) ப்ளிடம் காலன் வர அஞ்சுவான் P (7) யார்க்கு இனிப் பிறப்பு இல்லை P (8) மனிதரில் கலையாயவர் யார் ? (9) யார்க்கு அல்லல் இல்லை ? (10) யார் மீண்டும் மீண்டும் இறந்து பிறந்து உழல் வார்கள் ? (11) ஞானம் எது, விரும்ப வேண்டுவது எது? (12) யார்க்கு விடு எளிதாகக் கிட்டும் ? விடைகள் : 1. திருவாஞ்சியத்தில் தங்கி வாழ்பவரும், சிவனது திறத்தைப் பாராட்டி வாழ்பவரும், தேவர்க்கும் தேவ ராவார். அவர்களே செல்வர்; அவர்களுக்குத் துன்பம் இல்லை. பாவம் இல்லை. 2. சடைப்பெருமான் திருவடியை உணர்ந்த உள்ளத் தினரே உணரும் ஞானிகளாவர். 3. திருக்கொடுமுடி’ என்று அத்தலத்தின் பெயரைச் சொன்ன அளவிலே வினைக்கிடமாம் பிறப்பு ஒழியும் ; பிறப்பு ஒழிகற்கு அதுவே கைகண்ட யோக வழி. 4. இறைவனது கழலை வாழ்க்கல்தான் வாழ்வாவது. 5. சிவனது திருக்கோயில் இல்லாத ஊர், சிறப் புடன் பல கோயில்கள் இல்லாத ஊர், திருநீறு அணியா தவர் வாழும் ஊர், பக்தியுடன் இறைவனைப் பாடாத வர்கள் வாழும் ஊர், பூசை வேளையில் சங்க ஒலி இல்லாத ஊர்; கொடி, விதானங்களுடன் திருவிழாக்கள் நடவாத ஊர், பூசைக்கு மலர் பறியாது உண்பவர்கள் வாழும் ஊர்இவையெல்லாம் ஊர்கள் அல்ல, பெருங்காடே.