பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) 13. அப்பர் திருப்பூவணத்திற் கண்ட காட்சி [7 (12)] பொடியேறு திருமேனி, களிற்றுரிவைப் போர்வை, தேவி பாகம், ஏனமருப்பு, இருண்ட கண்டம், நெற்றிக்கண், சிர மாலை, கோவண ஆடை, கல்லாலின் கீழ் இருப்பு, கீளுடை, விரிசடை, சடையிற் கங்கை, வெண்பிறை, அரவு, கூவிளம், கொன்றை, மத்தம் : காகில் வெண்குழை, கோடு; காத்தில் மான், மழு, திரிசூலம்; விடைவாகனம், விடைக்கொடி, பூதப்படை, மறைஒலி-இவைஎலாம் அப்பர் பெருமானது காட்சியில் தோன்றின; பன்னிரண்டு கண்னுடைய பிள்ளை யும் காட்சி கந்தனர். சிவபிரானுடைய வீரச் செயல்களான காலனை உதைத்தல், காமனை எரித்தல், திரிபுரத்தை எரித் தல், பிரமனது சிரத்தைக் கொய்தல் ஆகிய இவைகளும் புலப்பட்டன , சண்டேசர்க்கு அருளிய திறம், இராவணனை அடர்த்துப் பின்னர் அருளிய கருணை, வைகைக் கரையில் மண்வெட்டியுடன் சென்றுகின்ற கருணை- இவையும் புலப் பட்டன; எங்ஙனம், யார் யார் எவ்வெவ் வுருவில் தியானிக் கின்ருர்களோ அங்கனம் அவ்வவ் வுருவில் அவரவர்களுக் குத் தோன்றி அருள் பாலிப்பதும் புலப்பட்டது. 14. பிற தலங்களிற் கண்ட காட்சி [7 (13)] f கஞ்சனூர், கழுக்குன்றம், கற்குடி, செங்காட்டங்குடி, திருத்துருத்தி, நாரையூர், பாசூர், பூத்துருக்கி இக் கலங் களில் தாம் இறைவனேக் கண்டதையும், கண்ணுரக் கண்ட தையும் அப்பர் தமது பாடலிற் சொல்லியுள்ளார். நாகைக் காரோணப்பெருமானைக் கங்குலும் பகலும் கண்டு களித் தாராம். வெண்ணித் தலத்தை முதல்நாள் கனவிலோ கனவிலோ கண்டு மறுநாள் அத்தலத்தைத் தரிசித்தார் என்பதை நெருநற் கண்டவெண்ணியே' எனவரும் பதிகக் தில் தெரிவித்துள்ளார். | o இறைவனுடைய ஆனும் பெண்ணும் ஆய வடிவு,