பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஒளவநறிக் கட்டுரை (அப்பர்) Һ லின்றியமையாது இருக்கவேண்டிய படிமங்களாகும். இம் முறையாகத் தனித்தமிழ்த் 'திருக்கோவில் விரிவடைந்துள்ளது. இவ் விரிவு" "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும், நன்றே கினை மின் ' என்னும் செந்தமிழ்மறையுடன் மாறுபடுமோ ? எனின், படாதென்க; என்னே இவையனைத்தும் ஒன்றனுடைய பல்வேறு பண்புகளாகத் திகழ்கின்றமையான் என்க. இத்தகைய ஒரு விழுமிய முழுமுதலாகிய சிவபெருமானே முதன்மையாகக் கொண்டு அழியா வழிபாடு தனித்தமிழால் செய்துய்ய வழிகாட்டுவது திருமுறைகள் என்ப. அவை பன்னிரண் டென்ப. அவற்றுள்ளும் ஏழு திருமுறைகள் தேவாரம் என்ப. திருவருளாற்றல் ஏழாதலின் முதன்முறைகள் ஏழாயின. திருவருட்டொழில்கள் ஐந்தாகலின் எஞ்சிய திருமுறைகளும் ஐந்தாயின. மேலும் கம் அருங்தமிழ் மொழியின் ஆவி எழுத துக்கள் ஏழும் ஐந்தும் ஆகிய பன்னிரண்டாதலின் திருமுறை களும் பன்னிரண்டாயின. என்றலுமொன்று எனவே திரு முறைகள் செந்தமிழ் மொழிக்கு ஆவி போன்றன என்பது துணிபு. ஏழு திருமுறைகளுள் முதன் மூன்று திருமுறைகள் திரு ஞானசம்பந்தப் பெருமானராலும், அடுத்த மூன்று திருமுறைகள் திருநாவுக்கரசு காயனராலும், மற்ருெரு திருமுறை கம்பியாரூர ராலும் கவின் றருளப்பட்டனவாகும். முதன் மூன்று திருமுறை களுக்கும் கழக வாயிலாகத் ' தேவாா ஒளிநெறிக் கட்டுரை ' வெளிவந்துள்ளது. அதுபோல் அடுத்த மூன்று திருமுறை களுக்கும் தேவார ஒளிநெறிக் கட்டுரையாக ” இது வெளி வருகின்றது. கட்டுரையின் சிறப்பியல்பு, ஆசிரியரின் தனி மாண்பு அனைத்தும் அங் நூற்பதிப்புரையின்கண் விரிவாக எழுதப்பட்டுள்ளன. ஈண்டுச் சுருக்கமாகத் தருகின்ரும். திருநாவுக்கரசு நாயனர் கைத்தொண்டும் வாய்த்தொண்டு மாகிய இருவகைத் திருத்தொண்டும் ஒருங்கு புரிந்த பெருங் திருவினராவர். முன்பு சமண சமயம் புகுந்து பின்பு தமக்கையார் வேண்டுகோளின்படி திருவருளால் பழைய சைவ சமயம் வங்தா ராவர். அதல்ை அவர் அருளிய திருமறை மிக்க உறுதியுடைய தாகும். அவ்வுண்மை வழிபாட்டுக்குச் சிறந்த " திருவங்க H