பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்). யாரும் இல்லை. தேவர்களும் அறியமுடியாதவர் பெருமான் ; அயன் மால் ஆகி, அவர்கட்கு அப்பாலாகிய ஒன்ருகி, அறிய முடியாத கனகக் குன்று அவர்; உரை கொண்டு அவரை உணர முடியாது; எண்வசுக்கள், ஏகாதச ருத்தி ார்கள், கதிரோர்கள் அவரை அறியார்; அறிவோம் என்ற தேவர்களும் அவரை அறிய முடியவில்லை. அவன், இவன் என்று ஒருவருமே அறிய ஒண்ணுத செம்பொன் அவர் (5) ஆதி, நடு, அந்தம் (68 (80)) இறைவர் அங்கமும் ஆகியும் ஆகி கிற்கின்ருர். அவர் அங்கம் இலாதவர். அளக்கலாகாத ஆகி அவர் ஆகி, அந்தம் வைத்தவர் அவர், ஈறிலாகவர் அவர் ஒருவரே. அவர் ஈறும், நடுவும், முதலும் ஆவார். பின்னனும் முன்ன லும் அவரே. (6) ஆற்றல் (68 (81)) இறைவர் மாயப்போர் வல்லவர். அவர் முடிய வைத்தால் முற்ருகது ஒன்றும் . இல்லை. எப்பொருளையும் அவர் பிணக்குவார், பிரிவிப்பார், முடிப்பார்; யாரும் அவர் அடக்குவித்தால் அடங்க வேண்டியதுதான், ஆட்டுவித் தால் ஆடவேண்டியதுதான், உருகுவித்தால் உருகவேண்டி யதுதான், ஒட்டுவித்தால் ஒடவேண்டியதுதான், அவர் பாட்டுவித்தால்தான் பாடுவோம், பணிவித்தால்தான் பணி வோம், காண்பித்தால்தான் காண்போம்; அவர் காட்டr விட்டால் காணவே முடியாது. அவர் நரியைக் குதிரை யாகச் செய்வார். நாகரைத் தேவராக ஆக்குவர். வித்தில்லா மலே முளைக்க வைப்பார். (7) ஆறு (68 (32), 68 (166)) (தீர்த்தம் - தலைப்பு -81 (64) பார்க்க) இறைவரே ஆருகி அமர்கின்ருர். கங்கை, காவிரி, காலாறு (வாய்க்கால்), கழி, கோகாவிரி, குமரி, அலைவீசும் ஆறுகள்-எல்லாம் அவரே.