பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 தேவார ஒளிநெறிக் கட்டுரை டின்பம் நாடுபவருமாகிய மறையோர் விரும்பி வாழும் ஊர். பரக்குங் கீர்த்தி உடையவர் வாழும் ஊர். கொண் டர்கள் இறைவன் பெருமையைப் பேசும் ஊர். தொண் டர்கள் கூடி மலர் தாவி யேத்தும் ஊர். மறைகொள் தேம் பாட அறிஞர்கள் மகிழ்வுடன் இருக்கும் மனைகளைக் கொண்ட ஊர். இத்தலத்துக் கோயில் சித்தீச்சுரம் எனப் படும். இது நவமணி சேர்ந்த கோயில் ; செம்பொற். கோயில் , லக்ஷ்மீகசம் நிறைந்த கோயில்; கவமலி பக்கர், சித்தர், மறையோர் பேண மாதர் பாடி மருவுங் கோயில். கோபுரம்-விளங்கு கோபுரம், மதியைத் தீண்டும். திரு. விழாவில் மறை நிறை நாவர், பத்கர், சித்தர் பாடி யாடு வர். உய்ய விரும்பின் சித்திச்சரத்தில் செய்யும் தவமே தவம் ஆம் ; நெஞ்சே ! சித்தீச்சரக்கையே தெளிவு பெற்று நினைப்பாயாக. - 180. நனிபள்ளி :-புனல் அ லை க் கு ம் ஊர். முத்திலங்கு மணற் பரப்பைக் கொண்ட ஊர். சோலை சூழ் நகர். சோலையில் குயில் பாடக் கேட்ட பெடை வண்டு கானும் முரலும் க.அ மலரின் இதழைப் புல்லி ஒலிவண்டு உறங்கும். முல்லை, மெளவல், பிண்டி, புன்னை, கொன்றை நெருங்கும். புது மலர் மணம் வீசும், மந்தி கருங் குரங்குடன் குதிக்கும், வயலில் மேதி (எருமை) வைகும். மடையில் வாளை பாய நீல மலர் வாய் தெரிந்து மலரும். ஆரை சாய_தேரை மிதிக்கும் ; வள்ளைக் கொடி துவள வாளே குதிகொள்ளும் ; ஆரல் மீன்களை நாரைகள் வாரி யுண்ணும். புனற் கொல்லையில் அன்னம் வைகும்.' இத்தலம் உமை பாகனுக்கு உகந்த நகர். கொண்டர்கள் நாளும் அடி பாவும் ஊர். நறு மன மாலை இறைவனுக்குப் புனைந்து தொண்டு செய்பவ டைய பாடல் பெருகுந் தலம். வீட்டின்பம் விரும்பும் பெரியோர் வழிபடும் செம்மைப் புகழ் மல்குங் கலம். திருநனிபள்ளியை உள்க வினை கெடும். இது சம்பந்த தி ஆன. இக்கலத்து இந்தப் பதிகத்தை அவர் தமது கங்தையின் தோள்மேலிருந்து பறைமுழக்கம் போல இன்னிசையுடன் உரைத்தருளினர். h