பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 தேவார ஒளிநெறிக் கட்டுரை அல்லல் இல்லை. அவரை கினேயவல்லாரிடம் வினே நில்லாது. அவர் மாட்டுத் தொண்டு பூண்டு அவரை ஏத்த வல்லார்முன் துயர் தோன்ருது. அவரை ஏத்தா தார் ஏழையர், பேய்கள். அவரை ஏத்துவோர் குற்றம் இலர். அவரைப் போற்றுவோர் ஆற்றல் உடையோர். 214. வேட்களம் :-கடற் கானலுங் கழியுஞ் சூழ்ந்த தலம். கானலில் வண்டு பண்செய்ய மன நிறைபொழில் சூழ்ந்த தலம். உள்ளங் கலந்தெழுந்த வேத ஒலியிசையும் வேள்வியும் நீங்காத தலம். தேவி ல் ல நாயகி '. வேட்கள நன்னகர் ’ எனப்பட்டுள்ளது. 215 வேட்டக்குடி-கடலுங் கழியுங் கானலும் அருகில் உள்ள கலம் தாழைசூழ்ந்த கழிக்கானல் விளங்குந் தலம். காபாலியின் கனைகழலுக்குத் தொண்டு பூண்டு தொழுது இறைஞ்சுவதுபோலக் கடல் சுடர்ப் பவளத்தைத் திரைகொண் டெறியுங் தலம். இப்பியும் முத்தும் கானலில் எறிபடு தலம். வெண்மணற் பாங்கில் உள்ள தலம். திரை நீரில் மணிகள் உந்தப்படுத் தலம். கடற் சங்கு இடறிப்போய்ப் புன்னை நீழலில் அமருந் தலம். வெண்டாமரையும் வெண் குருகும் காணப்படும் கானலும் பொய்கையும் உள்ள தலம். திரைசேர் வயல் . குழுந் தலம். தேர்ைந்த மலர்ச்சோலை குழுந் தலம். மீன் பிடிப்போர் வலையில் மீன்வாரி ஊரெங்கும் விற்குக் தலம. - - - 216. வேதிகுடி:-இங்கு மாமரப் பொழிலின் நிழலில் வண்டு இசைபாடும். பொழிலில் கமுகு, வாழை பொலியும். இணை வாளைகள் மடுவில் பிரியாது விளை யாடும். வயல் வளப்பத்துடன் விளங்கும். இத்தலம் ஐம்புலன்களையும் வென்று, அறுவகைப் பொருளையும் தெரிந்து, இசைக் கிளவியால் வெஞ்சினம் ஒழிந்த பெரியோர் வாழும் பதி. மங்கையர்கள் மங்கலமாகக் கன்னி யர்க்கும் ஆடவர்க்கும் மணம் இயற்றும் பதி. மடந்தை யரும் ஆடவரும் கூட்டிய குழற்கலவியின் மணம் விண்ணிற் கமழ்ந்துலவும் ஊர். பாடல் பாடுபவரும், அடியார்