பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 தேவார ஒளிநெறிக் கட்டுரை கின்றனர். உதாரணமாக :-அசத்துறை அடி-குளு, ஆமாத்தார் அம்மான், ஆலவாய் அண்ணல, குடமூக்கிற் குழகன், திருநெல்வேலிச் செல்வர், புகலிப் புண் ணியன், வலஞ்சுழி வாணன். 88. தலம், கோயிற் பெயர், [230 (ii), 234) காரோணத் தலங்களாகக் கு டக் ைக ைய யும் நாகையையும் வீரட்டானத் தலங்களாக அ தி ைக, கடவூர், கண்டியூர், கோவலூர், பறியல், விற்குடி என்னுக் தலங்களையும்; பெருங்கோயில், மாடக்கோயில் உள்ளன வாக அழுந்துார், ஆக்கூர், கீழ்வேளுர், குடவாயில், நல்லூர் (மலக்கோயில்),பெண்ணுகடம், வைகல் என்னுங் தலங்க ளையும் சொல்லியுள்ளார். ஆவூரிற் பசு பதிச்சரமும், காவிரிப்பூம்பட்டினத்திற் பல்லவனிச்சரமும், திருச்செங்காட்டங்குடியிற் கணபதிச் சரமும், நரையூரிற் சித்தீச்சரமும், திருப்பனந்தாளில் தாடே கச்சரமும், திருப் புகலூரில் வர் த்தமானிச்சரமும், தி ரு ம யி லை யி ற் கபாலீச்சரமும், மாதோட்டத்திற் கேதிச்சரமும் திருக்கோயிலின் பெயராக எடுத்துக் கூறியுள்ளார். I 89. சுவாமி பெயர் - தேவி பெயர் முதலிய 235) சம்பந்தமூர்த்தி தமது பதிகங்களில் ஆங்காங்கு அவ்வத் தலத்துக்கு உரிய சுவாமியின் திருநாமத் தையோ, தேவி திருநாமத்தையோ, ஸ்தல விருகத் தையோ, திர்க்கத்தையோ எடுத்துக் கூறுவர். உதாரண மாக, திருவக்கரைப் பதிகத்தில் சந்த்ரசேகரர் என ச் சுவாமி திருநாமத்தையும், அண்ணுமலைப் பதிகத்தில் உண்ணுமுலே எனக் கேவி திருநாமத்தையும், திருவெண் காட்டுப் பதிகத்தில் முக்குளநீரையும், திருமயிலைப் பதிகத்தில் புன்னே விருகத்தையும் எடுத்துக் கூறி யுளளாா.