பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 தேவார ஒளிநெறிக் கட்டுரை பட உரைத்தனர் (பதிகம் 297]. திருநீற்றைப் போற்றிப் பதிகம் பாடிப் பாண்டியன் உடலிலுற்ற தீப்பிணி தீரப் பாடினர் (பதிக ம் 202]. இது தேவியின் திருமுலையைச் சிறப்பித்துக் கூறுவதால் இதை எரியிலிடிற் பழுதில்லை, இது மெய்ம்மை’ எனத் திடம் படப் பாண்டியன் முன்னிலையிற் கூறித் திருநள்ளாற்றுப்பதிக ஏட்டை எரியிலிடும்பொழுது ஒரு பதிகம் [345] பாடினர். பின்னர்-பாண்டியன் சபையின் முன் னிலையில் பதிகம் எழுதி நதியில் இட்டதையும், அந்த ஏடு விடையே றும் பெருமானே பெருமான் என்பதைத் தெய்வங் தெளியாதார்கள் யாவரும் அறியும்படி ந ட் டி, நீரோட்டத்திற் பற்றுதலின்றி எதிர் ஏறிச் சென்று அமணர் செய்துவந்த பழிச் சொல் அடங்கவும், சிவனாது திருப்புகழ் ஓங்கவும் செய்து திரு எடகத்திற் கரையிற் சென்று அணைந்தது என்பதையும் தமது பதிகங்களில் [3 12-11, 371-12, 290–1 1] விளக்கியுள்ளார். அங்ங்னம் எதிர் சென்ற ஏட்டில் எழுதிய வாழ்க அந்தணர் என்னும் பாசுரத்தைப் பல்லார்சளும் மதிக்கப் ” பாடிய பாசுரம் என்கின்ருர் (812-11). இறைவன் திருவருட்டுனையே பாண்டியன் தேவியின் மங்கல அணியைக் காக்கது என்றும் சொல்லியுள்ளார் [373-6]. இங்ங்ண்ம் திருவாலவாயிற் பல லீலைகள் செய்தனர். திருப்பூவணம் :-இத்தலத்துப் பதிகத்தை பகைவர் கள் அஞ்சத் தமிழிற் சொன்னதாகத் தெரிவிக்கின்றனர் (64 – 11). திருப்பாதாளிச்சுரம் :- இத்தலத்துப் பதிதத்தில் (108) மதிசூடிய தோற்றத்தையும், தேவிபாகமமர் தோற்றத்த்ை யும் சிறப்பித்துப் பாடியுள்ளார். கொள்ளம்பூதார் :-இத்தலத்துப் பதிகத்தில் [264-6] தாம் பதிகம் . பாடி ஒடஞ்செலுத்தி -ஒடங் கரையணையச் செய்ததைக் குறித்துள்ளார். o,