பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 தேவார ஒளிநெறிக் கட்டுரை - A உங் ΕllΙΓΙΤ Η5 அவதாரத்தில்:-பயங் மரமான கோப இருப முடன் பன்றியாய்ப் பூமியைத் தமது எயிற்றின் நுனியில் கிறுவினர்.

  • வாமனுவதாரத்தில்:-குறிய, அழகிய மாணியின் உருக்கொண்டனர். வானவரை வருத்திய மாவலியிடம் சென்றனர்; சென்று மண் இரங்தார்; தான நீர் ஏற்ருர்; குறளாம் அவர் வானளாவி கிமிர்ந்தார்; தாவினர்; மண்ண அளந்தார், விண்ணை அளந்தார், திசைகளை

அளந்தார், அடி மூன்று அளந்தார். பூநீராமவதாரத்தில்:-விற் போர் வல்லமையால் அரக்கனைச் செற்ருர். கிருஷ்ணுவதாரத்தில் :- குருந்தொசித்தார், புள்ளின் வாயைப் பிளந்தார், மருதிடை நடந்தார், மலையைக் குடையாக ஏங்கி மழையைத் தாங்கினர், தடுத்தார்; யானையின் வெண் கொம்பை ஒடித்தார், விளவின் கனியைக் கன்ருல் எறிந்தார். திருமாலின் படை-திருமால் கையிற் பொலியும் LİĞİ) L_ 'ஆழி’ (திகிரி, சக்தரம், நேமி, எனவும் படும்). இது அடல் (வன்மை) மலிந்தது, ஒளி வாய்ந்தது, கூர்மை கொண்டது, மதிப்பு மிக்கது, எரி வீசுவது; உம்பர்க்ள் துதி செய்யத் திருமால் இப் படை கொண்டு அவர்களைக் காத்தளிப்பார். திருமாலின் கையில் 'சங்க'மும் உள்ளது; அ.அது ஒளி வீசுவது. திருமாலைக் குறிக்கும் பெயர்கள்:-அரவணையான், அரி, ஆழியான், ஒதவண்ணன், கண்ணன், கரியவன், கரியான், கரியோன், கார்வண்ணன், காழியான். கிடந்தவன், கிடந்தான், கோவலன், திருவின் நாயகன், திருமால், நாரணன், நெடியவன், நெடியான், நெடுமால், பச்சையான், மணிவண்ணன், மதுசூதனன், மாதவன், மாயவன், மாயன், மால், மாலவன், மாலான், மாலிஞர், முகில் வண்ணன், விண்டு, விளங்கொளி.