பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110. நாயன்மார் 335 சோழன் ’ எனப் பெயர் பெற்ருன் , கழலினன் ; போர் வீரன் ; திறைவாங்கிய நிறைசெல்வன் ; நல்ல அரசன் ; யானைப்படை உடையான் ; முற் பிறப்பிற் சிலந்தியாயிருந் தவன். தான் செய்த தவப்பயனல் அடுத்த பிறப்பில் சோழ ராஜனுக இறைவன் அருளாற் பிறந்தான். அம்பர்ப் பெருந்திருக்கோயிலும், வைகன் மாடக்கோயிலும் இவன் கட்டிய கோயில்கள். கண்டலை நீனெறி கோயிலுக்கும் இவன் சம்பந்தம் உண்டு. திருவானைக்கா அண்ண லின் திருவருளே ப் பெரிதும் பெற்ற பெருமை உடையான். (b) சண்டேசுரர் (295(5)) :-இவர் ம ண் ணி யாற்றின் கண் ம ன ல | ல் இலிங்கந் தாபித்துப் பாலபிஷேகஞ் செய்து நறுமலராற் பூசிக்க, இவர் தாகை பாற்குடத்தை இடறிச் சிந்தி இவரது புண்ணிய கருமத்துக்கு இடர் செய்ய, இவர் கோபித்து அவர் காலை வெட்ட, இறைவர் இவர் திருப்பணிக்கு உகந்து தாம் -அணியும் மாலையையும் தமது போனகத்தையும் இவருக்கு அருளித், தமது கையால் இவர் ஆகத்தைத் தடவி, இவருக்குச் சிவசாரூபம் அளித்துச், சண்டிசர் என்னுங் தலைமைப் பதமுந் தந்து ஆட்கொண்டார். முன்பு ஒரு காலத்தில் நிகழ்ந்ததாக இச் சரித்திரத்தை அறிந்தோர் சொலக் கேட்டிருக்கின்ருேம் ? என்று சம்பந்தப் பெருமான் சொல்லுவதாற் சம்பந்த மூர்த்திக்குப் பலகாலம் முன்னர் இருந்தவர் சண்டேசுரர் என்பது ஏற்படுகின்றது. (6) சிறுத்தொண்ட நாயனுர் (295(6)) :-இவர் ஊர் திருச்செங்காட்டங்குடி இவர் திருநீறு பூசுவார்; திருநீறு உட்கொள்ளுவார் ; போர் வீரர்; சீருஞ் சிறப்பும் நிறைந் தவர்; சிட்டர் ; இவர் வேண்டுகோளின்படிச் சம்பந்தப் பெருமான் திருச்செங்காட்டங்குடி யிற் கணபதிச்சரத்து மேய பெருமான் பேரிற் செந்தமிழ்ப் பதிகம் பாடினர். கணபதிச்சரத்தில் இந் நாயனர் மிக ஈடுபட்டவரென்றும், இக் காாைது தொண்டில் ஈசனர் மிக ஈடுபட்டவ - ரென்.றம் சம்பந்தப் பெருமான் பாராட்டியுள்ளார்.