பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184, பார்வதி தேவி 25.3" (18) மொழி:-அமுகியது, துயது; மொழியின் இனிை மக்கு இன்னிசை யாழ, குழல, பண், கரும்பு, தேன், பாகு, பால், கிளி, குயில்சொல்லப்பட்டுள. (19) வாய் இதழ்-கெ ாவ்ை வக்கனி, பவளம் போன்றது. (2) விரல் :-காங் தள்போன்றது, பந்து அமர்வது. தேவியைப்பற்றிய பிற செய்திகள்:-தேவி இம வா ன் மகளாதலால் மலைமகள் என்னும் பொருளிற் பல சொற்ருெடர்கள் வந்துள. உதாரணமாக - கல்லின் மான், கல்லின ற் பாவை, சிலம்பின் மங்கை, வரை மகள்-என வருவன காணலாம். திருமாலே தேவி. தேவி இறைவர் ஆகத்தில் இடது பாகம்கொண்டுள்ளாள். தேவி மார்பிற் சிவனும், சிவன் மார்பில் தேவியும் உறைவர். தேவி இறைவனுக்குத் தாரம். இமையோர்க்கு உச்சித் தானத்தவள். தேவி மாலை யணிந்துள்ளாள் ; சூடகம், நூபுரம், பாடகம், பூந்துகில், பொற்ருேடு, மேகலை, வளை அணிந்துள்ளாள். தேவி தீதிலாள்; கல்லாள்; அழகும், இளமையும், உருவும், ஒளியும், குளிர்ச்சியும், தளிர் வண்ணமும், தேசும், வளமும், வடிவும் விளங்குபவள்; முடிவிலாப் புகழும் பெருமையும் வாய்ந்தவள். அழிவிலாள்; பழையோள்; மாறிலாள். சத்திகளுள் ஆதிசத்தி தேவியே, தேவியுடன் இறைவன் தொல்லை யூழியாய் கிற்பவன் ; தேவியொடு பிரிவிலான். இறைவனிடத்து அன்பிற் பிரியாதவள் தேவி, அறங்களை வளர்ப்பவள்; திரிபுரத்தை எரித்தவள். காஞ்சியில் தவஞ் செய்தபொழுது கம்பா நதி பெருக்குக்கு நடுங்கித் தேவி இறைவனைத் தழுவினள், உடனுறையும்பேறு பெற்றனள். தேவி சுளிவு கொள்ள இறைவன் தேடிச் சென்று அச் களிவை நீக்கியருளினர். தேவியும் இறைவனும் உயிர்கள் தோறும் அமர்ந்துள்ளார்கள். கங்கையின் வரவு கண்டு கேவி முனிவு (கோபம்) கொண்டு வாடினள், ஊடினள். பிடி உரு எடுத்துத் தேவி கணபதியைப் பெற்றிட்டாள்.