பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 தேவார ஒளிநெறிக் கட்டுரை கொத்துகள் ஒழுங்காகத் தொங்கும்; பொன் தாது உதிரும்; கொன்றைமலர் அழகுள்ளது,தேன் கிறைந்தது, வாசனையுள்ளது, வண்டு மொய்ப்பது, பொன்னிறத்தது, விரைவில் வாடாதது. s 權 (20) கோங்கு :-இதன் மலர் பொன்னிறத்தது. மகளிர் தன த்திற்கு உவமை கூறப்பட்டது. (21) கோடல் :-கோடற் பூ படமுடைய அரவு போலத் தோன்றும்; கை விரல்களைக் கூப்பினது போலவும் இருக்கும். மலைகிலத்தில் வளரும். (காந்தள். என்பதைப் பார்க்க) : (22) சந்தனம் :- மலைநிலத்தில் வளரும்; தழைகளைக் கொண்டு பொலியும்; இம்மரத்தில் கேன்கூடு இருக்கும்; இதன் வாசனை எட்டுத் திசையும் வீசும். சந்தன மரத்தின் திண் சிறையால் கினை வித்தி வேடர்கள் தினை விளைவு செய்வார்கள். சந்தன மரத்தின் தளிரைத் தின்று பெண் யானைகள் கன்றினெடு குலவி விளையாடும். (23) செண்பகம் :-இதன் மலரின் வாசனை வெகு துாரம் (அண்டமளவும்) வீசும்; வண்டுகள் நாடும். (24) செருந்தி :-காலேயிற் செம்பொன் போலப் (பொன்னிற இதழ்களுடன்) மலரும். (25) ஞாழல் :-நெய்தல் கிலத்தில் (கடல் சார்ந்த இடத்தில்) மலர்வது; புன்னையுடன் சேர்த்துச் சொல்லப் பட்டுளது. பூ-பொன்னிறம். (26) தாமரை :-நீரிற் சேற்றில் வளர்வது; ملہا! {(ٹے குள்ளது; வாசனை கொண்டது; தேன் உடையது; தண் டில் முள் உண்டு; மலர்ந்த பூ கிண்ணம் போலத் தோன் அறும், இதில் லக்ஷ்மி வாசஞ் செய்வாள், அன்னம் வீற்றிருக்கும்; இதனுடன் குமுதம் வளரும்; இதன் மதுவை உண்டு களித்து வண்டுகள் பாடும்; செந்தாமரை கள் மலர்ந்துள்ள காட்சி செந்தி எரிவது போலத் தோன் அறும்; மீன் பாயத் தாமரை மொட்டு மலரும்; கமல வேலி ’ எனப்படும். பெண்கள் முகத்துக்குத் தாமரை உவமை கூறப்பட்டுள்ளது. =