பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 தேவார ஒளிநெறிக் கட்டுரை முத்தமுலோர், விழுமியார் வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் பஞ்சாகரம் (அஞ்செ முத்து). அந்தணர்களுள் மலையாளரும் இருந்தனர். கங்கை நாட்டு உயர் கீர்த்தி மறையவர் நல்ல நியமத்தவர். தகுதியின் மிக்கவர். தில்லைவாழ் அக்தணர்கள், கற்ற படியே எரியோம்பிக், கலியை வாராமே செற்றவர்கள். பிரமணப் போன்ற மறையோர் அக் கால க் து இருந்தனர். அவர் இறைவர் திருவடிப் பெருமையைய்ே ஆயுங் தன்மையர். அவர் தம் தியானத்தில் இறை வருக்கு விருப்பு. 148. மாதர்கள் (87.2.874) அரிவை, ஆயிழை, ஏந்திழை, ஏழை, கன்னியர், காரிகை, கொடியர், கொம்பனுர், கோதை, சேயிழை, தாழ்குழல், தெரிவை, தையல், கல்லார், நேரிழை, பாவையர், பூங்கொடி, பெண், பேதைமார், பைந்தொடி, மகளிர், மங்கை, மடக்கொடி, மடந்தை, மடவால், மடவார், மாதர், மாது-என்பன பெண்களைக் குறிக்குஞ் சொற்கள். (1) அவயவ வர்ணனை அடி :-தாமரை, பஞ்சு போன்றிருக்கும். அரை :-சிங்க அரை எனப்பட்டுள்ளது. இடை (மருங்குல்):-கொடி, துடி, மின், வள்ளிக் கொடி போன்றது. இதழ் :-கிஞ்சுக (முருக்கு) நிறத்தது. கண் :-அகன் றிருக்கும்; மையணிந்திருக்கும்; காவி மலர், குவளை, நீல மலர், கயல், கெண்டை, சேல், அம்பு, வேல், மான், விடம் போன்றிருக்கும். குழல்:-வண்டு மொய்க்கும், வாசனை வீசும், கறுத்திருக்கும், நீண்டிருக்கும், மலர் சேர்ந்துளது. கை-குடகம், வளை அணிந்திருக்கும். தோள் :-மூங்கில ஒக்கும்.