பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 தேவார ஒளிநெறிக் கட்டுரை 153. முருகக் கடவுள் (378) H இவர் அறுமுக இறை, கந்தன், குமரன், குமரவேள், சாமி, சேந்தன், சேய், மயிலுர்தி, முருகன், மைந்தன்என்னும் திருநாமங்கள் கொண்டவர். தேவர்களுடைய பகைவர்களைத் தொலைக்கவேண்டிச் சிவபிரான் இவரைப் பெற்றனர். இவர் மாயச் சூரை வதைத்தனர். பகை யெல்லாம் தொலைத்தனர். இமையோரைப் (பொன் அலகிற்) குடியேற்றினர். வள்ளியை மணந்தனர். குறிஞ்சி நிலத்திற் பெண்கள் குறிஞ்சிப் பண் பாடி இவருடைய பெருமையைப் புகழ்வார்கள். 154. முநிவர்கள் (879) (1) முகிவர்களுள் உபமன்யு, கெளதமர், ான காதி நால்வர், சூத முநிவர், துர்வாசர் (சண்பை முகி), பரா சார் (கொச்சை முகி), மார்க்கண்டேயர், வியர்க்கிர பாதர்-இவர்களைப்பற்றிய குறிப்புக்கள் உள. (உப மன்யு) பாலனயிருந்த பொழுது சிவபிரான் அவருக்குப் பாம் கடல் சந்த்து, (கெளதமரால்) இந்திரன் சாபம் பெற்றது, (சனகாதி) நால்வருக்கு இறைவன் அறம் உபதேசித்தது. சூத முநிவ்ர் (சிவ புராணங்கள் சொன்னது), துர்வாசர் தமக்குற்ற பழியைக் காழியில் களையப் பெற்றது, பரா சார் தமக்குள்ள துர்க்கந்தம் காழியில் நீங்கப் பெற்றது, மார்க்கண்டருக்காக இறைவன் காலனே அடக்கியது, வியாக்கிர பாதர் (நடன தரிசனம் கண்டு அதைக் கற்றது)-இவை குறிப்பிக்கப்பட்டுள. (2) முநிவர்கள் ஒழுக்கம் முதலிய-மாதவர்களும் முகிவர்களும் கா லையில் ஸ்நானம் செய்வார்கள். மரவுரித் தோல் உடுப்பார்கள். திருநீறணிவார்கள். காலே-மாலை கடவுள் வழிபாடு செய்வார்கள். மாசு நீக்கும் செய்ன்க உடையார்கள். உடலிலெழுகின்ற மயிர்களுடனும் சடை முடியுடனும் பெருந்தவம் செய்வார்கள். முன்னே வினையைத் தொலைக்க வழி தேடுவார்கள். மூப்பு அறியார் கள். சாபமிடும் ஆற்றலுடையார்கள். நான் மறைகளையும்