பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 தேவார ஒளிவெறிக் கட்டுரை (45) பூவை :-வீட்டிற் கூடத்தில் வளர்க்கப்படும் பூவைகள் மறை சொல்லும், L (46) பெண்கள்-பொய்கையில் நீராட அங்குள்ள வாளைகள் அருகிலுள்ள மடையிற் பாய்ந்து விலகும். சுனையிற் கருங்குவளைகள் மாதர்தம் கிலாப்போன்ற முகத்தில் உலவுறுங் கண்போல வளரும். தாமரை போன்ற சீறடியும், பஞ்சுபோன்ற மெல்விரலும், அாவு போன்ற அல்குத்தும், மயில்-குயில்-கிளியன்ன மொழியுங் கொண்ட மங்கையர் நடனம் செய்வர். (47) பொய்கை:-தவளையின் வாய் கிறைய கருங் குவளைகள் மதுவைத் தரும். (48) பொழில் :-பொழில்களில் மேகம் முழவு போல அதிரும்; பிறை தவழும்; மயில்கள் தாம் காதலித்த பெடையுடன் ஆடும்; அதைப் புல்கி ஆஅம். கலைமான் தனது துணையுடன் துயிலும். குயில்கள்.கூவும், மயில்கள் ஆஅம் ; கிளிப்பிள்ளைகள் குலவும். வண்டுகள் பண் செய்யும்; கலைமான்கள் துள்ளி விளையாட மலைகளும் எதிரொலி செய்யும். குரவம், சுரபுன்னை, கோங்கு, வேங்கை, மரவம், மாதவி, மெளவல் கலந்தோங்கும். வண்டு மலரூதி மது உண்ணுவதால் மலர்கள் இதழ் விரியும். தெங்கின் பழம் கமுகங் குலைமேல் விழும் ; அது வாழைப்பழங்கள் மீது விழும் ; வாழைப்பழங்கள் மதில்மேல் விழும். குவளைகள் மல்கும். கொடிகள் கூவிளத்தைச் சுற்றிக்கொள்ளும். - (49) மயில் :-மலைச்சாரலில் மயில் தன் பேடை யொடு ஆடும் ; ஆடி ஆலும் ; பொழில் நீழலில் வண்டு பாட மயில் ஆடும். மேகம் போலப் பேரி ஆர்க்கப் பொழிலில் மயில் ஆடும். (50) மரணவேதனை :--மரண காலத்தில் ஐம்புலனும் தத்த்ம் தொழில் செய்ய இயலாது கலங்கும்; நெறி மயங்கும்; அறிவு அழியும் ; கோழை மேற் படும்; வேதனை மிகும். (51) மலை :-மணிகொண்ட நாகங்கள் உலவுதலால் மலைக்ளில் இருள் விலகி ஒளிவீசும். சிலைவேடர்கள் மலை