பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165. வர்ணனைகள், விளக்கங்கள் 297 வழிகளில் வருவதால் மலையில் உள்ள யானை, புலி, சிங்கம் அவர்கள் வரவுக்கு அஞ்சும். மலைக்குகைகளில் சிங்கம், பன்றி, ஆன வாசஞ்செய்து விளையாடும். - (52) மழை :-மழைத்துளி சிதறச் சோலைகளிற் பசுக்கள் ஒன்றுசேரும். இடியிடிக்க பசுநிரைகள் அஞ்சி மலைச்சாரலில் ஒன்று கூடும். (53) மான் :-கலைமான், மான் கன்று, பெண்மான் இவை இரவில் ஒன்றுகூடி யிருக்கும். கலைமான் பெடையொடு பயிலும். (54) மூங்கில் :-பழைய மூங்கில்களினின்றும் ஒளி வீசு முத்துக்கள் கலகலென உதிரும். (55) யானை :-இடிக்கு அஞ்சி யானைக் கூட்டங்கள் சோலைகளிற் புகும். சிங்கத்தின் குரலோசைக்கு அஞ்சி யானை மனமொடுங்கிக் குகையிலே தங்கும். ஆளியின் வரவுக்கு அஞ்சி மலையைக் குத்திக் குகையில் தங்கும். யானையின் மத்தகத்தில் சிங்கத்தின் நகங்கள் பாய அம் மத்தகத்தினின்றும் முத்துக்கள் உதிரும். யானைக் கூட்டங்கள் முதுவேய்களைக் கோபித்துச் சுனைகளை நெருங்கும். மூங்கில் முளை களை வாரி ஆண்யானை பெண் யான வாயிற் கொடுக்கும். யானைகள் மூங்கிலைப் பற்றி வளைத்துவிட அஆ) வேகமாய் கிமிர்ந்துசென்று கருமேகத்தைக் கீறும். பி டி க ள் இளங்கொழுங் க்ொடிகளே மென்று தின்னும், தாமரை, மூங்கில்முள இவைகளை யானை உண்ணும். மலையில் உள்ள பொழில்களிற் சந்தனமரத்தின் தளிர்களைத் தின்று பிடி (பெண்யானை) தன் கன்றிளுெடு விளையாடும். இரவில் வழிமயங்கிய ஆண்யானை மலைச்சாரல் வழியே ஒடிப் பிடியுடனும் கன்றுடனும் அடிவாரம் சேரும். காணுது (Կ Iraծr பிடியை ஆண் யானை தேடி ஒடி அழைத்துத் ரிெயும். வேங்கை மலர்க்கொத்தைப் பறித்துத் தமது பக்ககத்தில் ஏந்திவந்து பிடியுங் களிறும் ஒருங்கே கருக்குறும்பலா என்னுந் தலத்தில் வ ண ங் கி ன. (கான ப்பேர் என்னுங் தலத்தில்) பிடிகள் பின்னேவர