பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 தேவார ஒளிநெறிக் கட்டுரை ஆண்யானை தனது கைங்கிறைய மலர்களைத் தழுவிச் சென்று, காலையில் தடித்தில் மூழ்கி விதிப்பிடி இறைவனை வழிபடும். பிடி தனது கையால் அலகிட (பெருக்கிச் சுத்திசெய்ய) காட்டான இறைவனை வழிபடும். (56) வண்டு :-மலர்களைக் கெண்டித் தேனுண்டு திளைக்கும். அல்லி மலரைப் புல்லி உறங்கும். தீங்கனிகளில் உள்ள கேனைப் பருகும். பெண் வண்டு தன் காதல் வண்டு ஆடிய புன்னைத் தாதுகளைக் கண்டு ஊடிப் பொழிலில் மறையும். கிழல் மலிந்த சோலையில் நீலவண்டு குழல்போலப் பண்பாடும். மயிலாடத் தான் . பாடும். குவளை மலரிலுள்ள கள்ளை அருந்தித் தாமரைத் காதின் மேலிருந்து வண்டு பண்பாடும். பல வண்டுகள் ஒன்றுகூடிக் குழல் போலவும் பறைபோலவும் ஒலிக்கும். வெண்டாமரைமேற் கருவண்டு யாழ் செய்யும். (57) வயல் :-தாமரை மலரும் நீர்நிலைகளிற் கயல்கள் கிளைக்கும். செங்கெல் அறுத்த இடங்களில் அசும்பு (புல்) பாயும். (58) வாவி :-வாலிகள்தோறும் தாமரை (மாதர்தம்) முகங்காட்ட, செங்குமுகம் வாய்கள் காட்டக், காவி மலரும்-குவளையும்-நெய்தலும் கண்காட்டும். (59) வாழ்க்கை :-பெண்டிர், மக்கள், சுற்றம், என்பன பேதைப் பெருங்கடல். வாழ்க்கை யென்பது பிணி, பிறவி, மரணம் என்பவைகளுடன் கூடியது. வாழ்க்கையில் பல் விழும், நா தளரும், மெய் வாடும், இங்கனம் வாழ்க்கை பழிப்புக்கு இடமானது. வினைக்கும் நோய்க்கும் இடமான நமது யாக்கையில் இன்பங் காண்ப தானது பாம்பின் வாயில் அகப்பட்ட தேரையின் வாயிற் சிக்கிய சிறு பறவை யொன்று பூவின் நறுங்தேனைச் சுவைத்து இன்புறுவதுபோல இருக்கின்றது (60) வாழை :-வேடர்கம் கைபோல வாழைக்கன்ரிக் குலை தொங்கும். வாழைப்பழம் தேன் சொரியும். செங்குலை வாழைகள் செழும்புனல் போல விளங்கும். மாறுகொண்ட யானையின் துதிக்கை போல வாழை குலை யினும். பழுத்த வாழைப்பழக் குலே பொன்னை ஒக்கும்.