பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166. வழக்கங்கள், பழக்கங்கள் 2.99. (61) வாளை :-தாமரை மலர்கள் சாய இளவாளை விண்ணிற் குதிகொள்ளும். அரித்த வயலிற் கிடக்கும் தாமரை மதுச்சொரிய அதைக் குடித்து வாளைகள் களித்துக் கரும்பு ஒடிய உள்ளே பாயும். காவிரிநீரானது வயலிற் பாய வாளைகள் கூடி ஆழ்ந்த நீர்நிலையிற் பாயும் ஒசை படையோசையை கிகர்க்கும். மடையில் வாளே பாய்வதால் நீல மலரின் மொட்டு இதழ் மலர்ந்து வாசனை வீசும். சோலைகளில் தெங்கின் பழங்கள் உதிர வாளைகள் குதிகொள்ளும்; அங்ங்னம் குதிகொள்ளுவதால் மதுத் தோன்ற மலர் விரியும் கழனிகளிற் சேற்றில் உள்ள செங்கயல் அழைப்ப இளவாளைகள் வந்து சேரும். (62) வெள்ளம் :-ஆற்றில் வெள்ளம் வர, வெள்ள நீர் இரண்டு கரைகளிலும் மோதி, மலைப்பண்டங்களை அடித்துச்சென்று வரம்பு மீறி ஒடி நெல், கழுநீர், குவளை இவைகள் சாயப் பாய்ந்து செந்தாமரைகள் முக மலரும்படி வயல்களிற் சேரும். (63) வேடர் :-வேடர் இட்ட விறகில் அகிற் புகை விம்மும். பன்றிகள் கிளைத்த ஒளி மணிகளை வேடர்கள் கூட்டிக் குவிப்பார்கள். வேடர்கள் சந்தன மரத்தின் சிறையால் தினை விதைத்து விளைவு செய்வார்கள். வெஞ் சொற் பேசும் வேடர் மடவார் பரண் மீதேறி ஆயோ என்று கிளி ஒட்டுவார்கள். (64) ேவ ள் வி :-வேள்விப் புகை விண்ணிற் புயலெனப் பொலியும். (65) வைகை :-இதன் வெள்ளம் சந்தனம், அகில் இவைகளை அடித்துக்கொண்டுவரும். = 166. வழக்கங்கள், பழக்கங்கள் (400) •. (அக்காலத்திய விஷயங்கள்) (1) ஆலய வழிபாடு, கடவுள் வழிபாடு, பஜனை:அடியார் இன்னிசை பாடித் தொழுவர்; கண்டு, உடுக்கை தாளம், தக்கை என்னும் பக்க வாத்தியங்களுடன் நடம் செய்து தொழுவார். புண்ணிய வாணர், மாதவர்,