பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 தேவார ஒளிநெறிக் கட்டுரை (18) பிள்ளை வரம் :-பிள்ளை வரம் வேண்டிைேர் புண்ணிய தீர்த்தங்களில் ஆடுதல் வழக்கம், அதுபற்றித் திருவெண்காட்டு முக்குள நீரில் முழுகி வழிபட்டால் பிள்ளைவாம் ஐயுறவின்றிச் சித்திக்கும் என்றுள்ளார். (19) புலவர் நிலை :-அக்காலத்தில் புலவரிடத்தில் வெகு மதிப்பு இருந்தது. வையம் என்ன விலை மாறி விட்ாலும் புலவர்களுக்குக் கடுமொழி கூருதவர்கள் இருந்தார்கள். .ெ பா ரு ட் செல்வ முடையோர் புலவர்களுக்கு நிதி கொடுத்து ஆதரித்தனர். (20) பேய் :-பிடிப்பதும் உண்டு; பிரிவதும் உண்டு; திருவெண்காட்டு முக்குள நீரிற் படிந்தால் பேய் அனுகாது, பேய்பிடித்திருப்பின் அது பிரியும், இதில் ஐயம் வேண்டாம்-என்கிருர். (21) பொழில்கள் :-பொழில்களில் ஆடல் பாடல் நடைபெறும். (22) பொழுது போக்கிய விதம்:- பூஜை, வந்தனை செய்யுங் காலந்தவிர மற்ற நேரங்களில் மறை பேசியும், சந்திப்போதில் கிஷ்டையிலிருந்தும் பெரியோர்கள் காலம் போக்கினர். (23) போர், போர்க்_கோலம், போர் வி%ளயாட்டு :தும்பை மாலை பூண்டு போருக்கு எழுதல், மற்போர் புரிதல் (பிரமனும் மாலும் தொடையும் மார்பும் மாறுபட இகலியது), திருவிழாவில் சேரியில் வேல் விளையாட்டு இவைகள் கூறப்பட்டுள. (24) மகேசுர பூஜை (ஆருத்திர கணத்தவர் களுக்குப் பூஜை):-அண்ணலா , யார்தமை அமுது செய்வித்தலின் சிறப்பு குறிக்கப்பட்டுளது. (25) மயில்:-திருப்புத்துாரில் தெருவு தோறும் மயில்கள் உலவினதைக் கூறியுள்ளார். (26) மனைகள் : (i) கட்டும் வகை:-சுவர் வைத்தல், கழி கிரைத்தல், கூறை வேய்தல், வாசல் வைத்தல் கூறப்பட்டுள. |