பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 தேவார ஒளிநெறிக் கட்டுரை கூட்டத்தது,கொடியது, சீற்றத்தது, திண்ணியது, தீயது, ரோதது, நலிவது, பந்திப்பது, பழகினது, பழையது, பற்றுவது, பொருவது, மலிவது, முந்துவது, முன்னேயது, வருவது, வலியது, வெய்யது. இறைவனே என்று அவரையே நாடி சிற்பின் வினை ஒடிப்போம். வினை தீர்வதற்கு இறைவனை வழிபடுதலே வழி. i. 176. விஜயன் (9,443-444) தலைப்பு-6 'அரசர்க ள்’, 75-சிவனும் விஜயனும்’ பார்க்க. 177. வேதம் (445.457) (தலைப்பு-146 மறையும் வேதமும் பார்க்க.) 178. வேள்வி-ஆகுதி-எரியோம்புதல் (458) அங்கணர் எரி மூன்றும் ஒம்பும் சீலம் உடையார்; கேடிலா வேள்வி செய்பவர்; மந்திர வேள்வியும் மறை, யொலியும் நீங்காதவர்; குறைவிலார்; அவர்கள் தங்கள் கையால் அகிற் கட்டையை எரியிலிட்டு ஆகுதி செய் வார்கள். ஆகுதியின் புகை வானிற் செல்ல மழை பொழியும். வேதத்தைப் போற்றிப் புகழ்பெற்ற வேதியர் களுடைய வேள்விச் சாலையின் மணங் கமழ் தாபப் புகை சோலை மிசைப் படரும், வானில் எழுந்து அற்புதமாக மேகம் போற் பரவும், மேகங்களில் தோயும், விண்ணை மறைக்கும், வானுலகை மூடி யிருளாக்கும். வேதமும் வேள்வியும் ஆயினர் இறைவர்; வேதமும் வேள்வியும் இறைவருக்குக் குடைபோலும். வேள்வி சோலைகளிற் செய்யப்படும். மறையில் விதித்த விதிக்கு மாறுதலின்றி வேதியர் செய்யும் வேள்விச் சாலையில் மந்திரங்களும் வேதமும் ஒவாது ஒதப்படும். சிறந்த வேத வேள்வியில் எங்கனும் விண்ணவர்கள் நறுமணம் வீசும் மலர்களே த் தாவுவார்கள். மறைவழியே அறிவின் வழியே புல்லைப் பரப்பி நெய், சமிதை இவைகளைக் கையிற் கொண்டு, எரியில் வேள்வி செய்து உலகத்தை மிகவும் காக்கும்