பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 தேவார ஒளிநெறிக் கட்டுரை வண்டு யாழ் வாசிக்கத் தன் இளம் பெடையைப் புல்கி மகிழ்ந்திருக்கும்; செந்தாது உதிர வெண் தாமரை மலர் மீது நடை பயிலும்,கன்னிப் பெடையைப் புல்கிக் காஞ்சி மலர்ச்சின்னம் ஆலும். பெடையொடு புல்கி விளையாடும். மெல்லிய மடகடையை உடையது. அதனுல் தேவியின் நடைக்கும் மாதர்கள் நடைக்கும் அன்ன நடை உவமை கூறப்பட்டுளது. சிவபிரானது முடிதேடும் பொருட்டுப் பிரமன் எடுத்த உருவம் அன்னப் பறவையின் உருவம். இது வென்றிப் பறவை எனக் கூறப்பட்டுளது. அன்னம் பூசித்த தலம் சீகாழி. இது தாதுக்கு எடுத்த பறவைகளுள், ஒன.அ. (3) ஆந்தை: - மரப் பொத்திற் கூட்டமாய் இருந்து பாடும். ஆங்கையின் விழி’ சிறு பூதத்தர்களின் விழிக்கு உவமை கூறப்பட்டுளது. (4) கபோதகம்:-(புரு)-கால் பவள நிறம். உடல் கருமை வாய்ந்த செழுமையது. இதுவும் துாதுக்கு உரித்தாக எடுத்த பறவைகளுள் ஒன்று. (5) கருடன்:-சிறகுடன் கூடிய அழகிய பறவை. வெல்லும் ஆற்றலை உடையது. வெல் பறவை எனக் கூறப் பட்டுளது திருமாலுக்கு வாகனமும் கொடியும் ஆகும். (6) கழுகு:- கழுகுகள் கரி காலன; காட்டில் வசிப்பன; குடர்களைப் பிடுங்குவன; சம்பாதி-சடாயு கழுகுகள். சிவபிரானது முடி தேட பிரமன் எடுத்த உரு கழுகு' என்று இரண்டு இடங்களிற் கூறப்பட்டுளது. | (7) காகம்:-கழனிகளிற் சூழ்ந்து பறக்கும். (8) கிளி:-பசிய கிறத்தது. சிறை யுடையது. பொழில்களில் மல்கும். கோதி உண்னும், விசும்பிற் பறக்கும். சொற் பயிலும், கொஞ்சும், பண்போன்ற மொழிகளைப் பேசும். இறைவன் நாமங்களை ஒதும். உயர்ந்த பனைமீது இருக்கும். வீடுகளிற் கூட்டில் வளர்க் கப்படும். சோலைகளில் கிளிகள் குயிலொடு பயிலும். குயில்பாட அதன் அயலில் உள்ள கிளி அப்பாடலேப்