பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 தேவார ஒளிநெறிக் கட்டுரை f சேரும். மாமரத்தின் இளந்தளிர்களைக்கோதி யாருக்கும் இனிதாகக் குயில்கள் பாடும். பொழில்களில் மாந்தளிர் களையும் வாச'மலர்களையும் குயில்கள் கோதும். குயிலின் குரல் இனிமை கொண்டது. குழலின் இசை கேட்டுக் குயில் பெடையுடன் பாடும், இன்னிசை பாடும். குயிலின் பாடலைக் கேட்ட வண்டு தானும் முரலும். குளிர்ந்த இசையிற் குயில் பாடக் கேட்ட பெடை வண்டு தானும் முரலும். வண்டு இசை முரஆவதைக் கேட்டுக் குயில் அதைத்தானும் பயிலும், வண்டின் இசை கண்டு குயில் கூவும். பாடற்குயில்கள் சோலைகளிற் பயிலும். கடமயில் ஆல குயில் கூவும். குயிலின் மென் மொழி மாதர்களது மொழிக்கும் தேவியின் மொழிக்கும் உவமை கூறப்பட்டுளது குயில் தூதுக்கு எடுத்த பறவைகளுள ஒன அறு. (10) குருகு:-வெண்ணிறத்தது. கரிய அடியையும் பசுங் காலையும் உடையது. வாய் கூரியது. தாழை வெண் மடலைத் தனது இளம் பெடை யெனக் கருதி ஏழைக் குருகு புல்கும். மடல்விரிந்த கோண லான தாழைமலரின் நிழலைக் குருகு என அஞ்சித்தடங்களில் உள்ள கெண்டை மீன்கள் தாமரைப்பூவில் மறையும். குருகு புன்னைமரத்தில் பெடையுடன் வதியும். பைங்கானலில் நீர்த் துறைகளில் இரை தேரும்; மேய்ந்து உண்ணும். ஆரல்மீன்கள், கெண்டை, சுறவம் இதற்கு உணவு. அகன்ற கழனிகளில் சிறகு உலர்த்தும்; கழி, கானல், குளிர் பொய்கை, வயல், கழனி, குளிர் சோலை முதலாய இடங்களில் இருக்கும். H அன்றில் வேறு, குருகு வேறு, காரை வேறு, என்பது :: இளங் குருகே! கழி நாராய்! குசம்பை வாழ் முயங்கு சிறை அன்றில் காள்'; என 60-ஆம் பதிகத்திலும் ..அன்னங்காள்! அன்றில்காஸ் மடகாாய் கானல் வில் குருகே!-என 321-ஆம் பதிகத்திலும் வருவதால் க்ெரி கின்றது. குருகு துதுக்கு எடுத்த பறவைகளுள் ஒன்று. (11) கூகை (கோட்டான்):-சுடுகாட்டில் வசிக்கும்; முரஅம், அலறும். ஒமை, கள்ளி, வாகை, முள்ளில் முதலிய மரங்களில் இருக்கும். உயர்ந்த மரக்கொம்பி