பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 தேவார ஒளிநெறிக் கட்டுரை (2) யாவன:-(i)இருக்கும் இடம், திரியும் இடம்,திரியும்வகை. யானைகள் கூட்டமாய்ச் மலைச்சாரல்களில் திரியும், இரவிலும் சிரியும், குகையில் வாசம் செய்யும். இரை தேரச் சாரல்களில் திரியும், பெண்யானையுடனும் கன்றுடனும் திரியும். கரி இரவில் வழி தெரியாது திகைத்துப் பிடியுடனும் கன்றுடனும் மலையடிவாரத்தைச் சேரும். சிங்கத்துடன் மதகரி சாரல்களில் திரியும். வழிதப்பிப்போன பிடியைக் காணுது ஆண்யானை ஒடி அழைத்துத் திரிந்து சாரலில் உறங்கும். மலைக் கைகளில், களிறும் பிடியும் கூடி விளையாடும். யானைகள் கானலில் திரியும். (ii) இரை தேடுதல்-உணவு குகையில் வசிக்கும் பெரிய யானை மலைச்சாரலில் இரைதேரும். மலையில் உள்ள நெருங்கிய பொழிலில் குளிர்ந்த சந்தனமரத்துக் தளிர்களைத் தின்று குலவிப் பிடி தன் கன்றிைெடு விளையாடும். ய்ச்சை மூங்கிலின் முளையை வாரி யானை தன் பிடியின் வாயிற் கொடுக்கும். பிடிகள் இளங்கொழுங் கொடிகளைத் கறித் கெழும். கரிகள் கழைகளை (மூங்கில்-கரும்பு) நுகர்தரும். (iii) யாவனயின் தன்மை:-ய ா னை யி ன் கூட்டம் மூங்கில்களை முறித்துச் சுனை நீராடும். யானை அருவிக்கு அஞ்சி இரியும். பெரிய யானையையும் விழுங்கும் பாம்புகள் உள. யானை மருப்பொடு போர் புரியும். யானை சொரிந்த மதச்சேறு தெருவெலாம் நிறையும். துனியைப் பற்றி யானை தாழ்த்திவிட்ட பலத்த மூங்கில் விசையொடு மேலே போய்க் காளமேகத்தைக் கீறும். மலையிற் சிலை வேடர்கள் வரும் வழியிற் செல்ல யானைகளும் அஞ்சும். (iw) யாவனயைப்பற்றிய செய்திகள்:-யானைக்கு மணி கட்டுவர், யானையின் குரல் இடிபோற் கடியது. இராவணனது தடக்கை யானையின் கைக்கு உவமான மாகக் கூறப்பட்டுளது. ஐம்புலன்கள் யானைக்கு ஒப்பிடப்பட்டுள; தொண்டர்கள் ஜந்துகளிறுகளையும்' (புலன்களையும்) அடக்க வேண்டும். சமணர்கள் மதகரி போலத் திரிந்தனர் எனப்பட்டுளது. வாழைக் குல