பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 ° தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) 130. சுந்தரர் கண்டுதொழ விரும்பியஹை (142) சிவபிரான் குடியுள்ள கொன்றை மாலை, கொக்கிறகு, மக் கமலர், இளம்பிறை, அரவு, அவருடைய சடைகள், எண் தோள்கள், நீலகண்டம், அவர் திருக்கரத்தில் ஏந்தியுள்ள எரி, மழு, அவரது விடை வாகனம், அவரைத் தொழுது வணங்கும் தொண்டர் குழு, அவரது பாகத்தில் விளங்கும் தேவி, அவர் தில்லையில் ஆடும் திருக்கூத்து முதலியவற்றைச் கண்டு தொழுவது என்று கொலோ-எனக் கவலுகின்ருர் சுந்தார். 131. சுந்தரர் தம்மைத்தாமே இழித்துக் கூறும் சொற்கள் (148) o அடிநாய், அறிவில்லேன், இழுதையேன், ஏழையேன், கட்டனேன், கண்ணறையன், கொடும்பாடன், சழக்கனேன், செடியன், தீயன், நாய், நொய்யேன், பாவியேன், “பெட்டன், பேதையேன், பொய்யடியேன், மதியில்லா ஏழையேன், மூடனேன், மூர்க்கனேன்-என்பனவும் இவை போல்வன பிறவும். 132. சுந்தரர் தமது குறைகளை எடுத்துக் கூறுதலும், வாழ்க்கை நிலையாமையைக் குறித்து அஞ்சுதலும் (144) அரனே எனச் சொல்லமாட்டாத அறிவிலி நான் ; கமன் வருகையை கினைந்து அஞ்சுபவன் ; வஞ்சனே மனத் தன், செல்வப் பொருளின் மீது மிக ஆசை கொண்டவன். உற்றபோதல்லால் உறுதிப் பொருளை உணராதவன்; ஊனைப் பெருக்கி உன்னேர் கினையாதிருப்பவன், ஐம்புலன்களும் என் வசப்படாதன ; அவைகளுக்கு அடிமைப்பட்டவன் ; கொடுமைகள் செய்பவன்; இரப்போர்க்கு ஈயாதவன் ;

  • பெட்டன்- பொய்யன், ஆசைப்படுபவன்.
  • உன்னை - என்பது இறைவன.