பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) தார் [70] :-பெருமானே உடம்பை வாட்டும் நோயிலுைம் கண்ணில்ாத கொடுமையாலும் மயக்கம் உற்றுக் கருத்தழி கின்றேன். எனது ஒரு பிழையைப் பொறுத்தருளுவதால் உனக்கு என்ன இழிவு உண்டாகும் அஞ்சாதே என்று ஒரு வார்த்தையாவது சொல்லி அருளுக ; உன்னைத் தவிர வேறு யார் எனக்கு உறவு ! 30. திருத்துருத்தியில் வினை, பிணி, நோய் நீங்கப் பெற்றது (74): கிருத்துருத்தி-வேள்விக்குடிப் பெரு மானே மறுபிறப்பு என்னும் நோயை இப் பிறப்பிலேயே நீ நீக்கிவிட்டாய்; என்னை அடைந்திருந்த கெட்ட-இழிவானநோயையும் இத்தினமே நீக்கிவிட்டாய். என்னைத் தொடர்ந்து பிடித்த பிணியைத் தொலைத்தருளிய்ை; என் மேலை நோய், பழவினை, அருவினை யாவும் உனதருளால் தொலைந்தன; இத்துணைக் கருணை காட்டிய எம்பெருமானே ! . உன்னே நான் எங்ங்னம் மறப்பேன் ; (மறக்கமுடியாது என்றபடி). 81. ஆருர்ப் பரவையுண் மண்டளியில் மற்றைக் கண்ணையும் தந்தருள் என்று வேண்டினது (96) பரவையுண் மண்டளிப் பெருமானே ! உன்னையே புகழ்ந்துகொண்டு இருக்கின்ற என்னை அஞ்சல்' என்று சொல்லி அருளுக. என் கண்ணைக் கொண்டாயே! அது காணும்படி செய்ய லாகாதா நா கவருமல் உன்னேயே நல்லன பேசுபவர் கதி இதுதான ஐம்புலன்களின் ஆட்சியில் நான் அகப்பட் டிருந்தபோதிலும் என் வாக்கை உனக்கே சமர்ப்பித்து உன்னை என் மனத்திற் கட்டிவைத்துள்ளேன்; நெஞ்சகத்தே உன்னையே நினைவாரை நீ அஞ்சேல் என்று கூறி அருளுக. 82. ஆரூர்ப் பெருமானை இரு கண்ணுலும் கண்டு மகிழ்தற் கில்லையே என்னும் வருத்தத்தால் தமது காதலைக் காட்டக் கைக் கிளைப் பதிகம் தலைவனிடம் தூதுவிடுமுறையிற் பாடினது (37): அன்னப் புெடைகாள்! கிள்ளைகாள் ! குயில்காள் ! குருகு, காள்! கொண்டல்காள்! சக்ரவாளப் பேடைகாள்! நாரைகாள், பூவைகாள், வண்டுகாள்! L என்பொருட்டு நீங்கள் ஆரூர்ப் பெருமானிடம் சென்று-நான் அவரைப் பணிய விரும்பு