பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) 60. நாகேச்சரம் (99) தெங்கு கிறைந்த பூம்பொழில் சூழ்ந்த தலம்; நறு மணம் தேடி அணைந்த வண்டுகள் ஒலிசெய்யக், குயிலும் மயிலும் நெருங்கும் பொழில் சூழ்ந்த தலம் : குல்லை. (வெட்சி அல்லது துளசி), முல்லை இவை தம்மில் ஊடாடிப், பின்னர்க் குளிர்ந்த மாதவி-குருக்கத்தியின்மேல் வண்டுகள் வந்து சேரும் தலம். குருக்கத்தியின் பக்கத்தில் உள்ள குரா பாம்பின் பற்களை நிகர்க்கும் அரும்புகளை ஈனச், செருந்தி செம்பொன் கிற மலர்களை மலர்விக்கும்; தாமரை மலர்மீது தேனை உண்டு வண்டுகள் பண்செய்யக், கயல் மீன்கள் திளைத்துக் குதிக்கும் தலம்; வெளிப்புறத்தில் உள்ள இளங்கமுகின் முதுபாளைகளில் உள்ள தேனெடு கலந்து தென்றல் புகுந்து உலவும் தலம்; மலர்ந்த மல்லிகை யிலும் சண்பகத்திலும் ஊடாடித் திரியும் வண்டுகள் பண் செய்யும் தலம் அழகிய குவளேயும் கழுநீரும் மலரும் வயல் சூழ்ந்த கிடங்கில் (அகழியில்) சேல்மீனும், வாளே மீனும் பாயும் தலம் : கயல் பாய்தரும் கழனிகளை உடைய தலம்: நீர் நிறைந்து குளிர்ச்சியுற்ற வயல்களைக் கொண்ட தலம்; மலைத்தலத்து மணியும், சந்தனமும், அகிலும் அருவி நீரால் உந்தப்பட்டு வரும் தலம். f தொண்டு பல செய்து இறைவனே வணங்கும் தொழில் பூண்ட அடியார்கள் பாவிப் போற்றும் தலம். 61. நாகை (4.6) கடற்கரைத் தலம்; காரோணத் தலம்; செல்வகிறை நகர் ; தோகை மயில் அனையவர்கள் நடமாடும் தலம்; காண்பதற்கு இனிமையான அழகிய மாடங்கள் நிறைந்த நெடுவிதிகள் பொலியும் தலம். I நோகைக் காரோணத்தில் வீற்றிருக்கும் பெருமானே! மறையோர் நிறைந்த திருவிழிமிழலையில் (சம்பந்தர் - அப்ப ருக்குக்) காசு கோடுத்து அருள்புரிந்தீர், இன்று எனக்கும் (காசு) அருளவ்ேண்டும்’ - என இத்தலத்தில் வேண்டு கின்றனர் சுந்தார். H [