பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 தேவார ஒளிநெறிக் கம்.டுரை (சுந்தார்) 8. கிருஷ்ணுவதாரத்தில் : யானையின் கொம்பைப் பறித்தவர், குதிரையின் வாயைக் கிழித்தவர், புள்ளின் வாயைக் கீண்டவர், மருத மரங்களின் ஊடு தவழ்ந்து சென்று அம் மரங்களை வீழ்த்தினவர், நப்பின்னேயை மணந்தவர். 4. வாமனுவதாரத்தில்: மாணி (பிரமசாரி) உருவுடன் சென்று மண்ணை அளந்தவர். T (2) திருமாலும் சிவனும் (175) 1. சிவபிரான் கிரிபுரத்தை எரித்தபோது : (1) திருமால் அம்பாக அமைந்தார் (2) திருமாலாம் விடைமீது பெருமான் திகழ்ந்தார். (3) திருமால் ஆகிய தேவர்கள் பெருமானுக்குக் குற்றேவல் செய்தார்கள். தேவர்களின் வேண்டுகோளின்படி பெருமான் திரி புரத்தை எரித்தார். 2. மங்கை பாகத்துடன் கிருமாலையும் ஒரு பாகமாக உடையார் இறைவர். 3. சலந்தரனேப் பிளந்த சக்கரத்தைப் பெறவேண்டித் திருமால் ஆயிரமலர் கொண்டு இறைவனைப் பூசித்தார். அப்பொழுது ஒரு பூ குறையக், திருமால் தமது கண்ணையே இடங்து மலராகச் சூட்டினர்; பெருமான் மகிழ்ந்து அந்தப் பண்ணுதற்கு அரியதான சக்கரத்தைத் திருமாலுக்கு அளித்தார். 4. தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கித் தமது உயர் தவத்தை அழிக்கவங்க காமவேளை-அவன் தந்தையாம் திருமால் காண விழித்தெரித்தார் சிவபெருமான். 5. திருமால், பிரமன் ஆகிய தேவர்கள் பெருமானைப் பூசித்து வணங்கினர் ; அவரது கிருவருளேப் பெற்றனர்; திருமாலும் பிரமனும் கிருமுதுகுன்றம் (விருத்தாசலம்), திருக்கழுக்குன்றம், திருவிழிமிழலை எனப்படும் தலங்களிற்