பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) யுங்கள். தவஞ்செய்யும் போகரும் யோகரும் அதிகாலையில் காவிரியில் மூழ்குவதற்குப் போவார்கள். 162. தென்றல் (178) கமுகின் பாளையில் உள்ள தேனின் மணம் கலந்த தென்றல் உலவுகின்ற தலங்கள் கலயகல்லூரும், திருநாகேச் சுரமும்; தென்றலின் மணம் கமழும் கலம் திருவாரூர். . 163. தேச சரித்திரம் (179) 1. பல்லவர் காஞ்சி மாநகரைத் தலைநகராகக்கொண்டு அரசு புரிந்தனர் (சுந்தார் காலத்தில்); மண்ணுலகை அரசாண்ட உரிமையாற் (சிற்றரசர்களிடம்) திறை வாங் கினர். அங்கனம் திறை கொடாகவர்க்குத் தில்லைவாழ் அந்தணர்கள் அரசுக்கு உரிய மரியாதை செய்வதில்லை. நாயன்மார் என்னும் கலைப்பு 178-ல் தில்லைவாழ் அந்தணர் என்பவர்களைப் பற்றிய குறிப்பைப் பார்க்கவும். 2. உமக்காட்செய்ய அஞ்சுதும் என்னும் பதிகத்தை (2 (11) ஆரூார் கிருப்பரங்குன்றக்கிற் பாடினபோது * முடியால் உலகாண்ட மூவேந்தரும்” உடனிருந்து கேட்டனர். 164. தேவதைகள் (180) 1. காடுகாள் (மோடி) கை கிறைய வளையல் அணிந்த மோடி என்னும் 'வனத்துக் காளியுடன் போகங் கொண்டு சிவபிரான் (திருமறைக் காட்டுக்கு அருகில் உள்ள) கோடி’ என்னும் கடற்கரைத் தலத்திற் கோயில் கொண்டுள்ளார். f 2. காளி பொாவல்லி பலத்தையுடைய தாரகன் என்னும் அசுரனைப் பொருது கொன்ற காளியை முன்பு படைத்த புனிதர் சிவபெருமான். f